வெள்ளி, ஜனவரி 06, 2012

கெட்ட ஆவிகளை விரட்ட சிறப்பு பூஜை செய்த இலங்கை கிரிக்கெட் வாரியம் !


கொழும்பு : இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உபலி தர்மதசா கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழுவை ஆட்டி படைத்து கொண்டிருந்த தீய ஆவிகளை சிறப்பு பூஜை நடத்தி விரட்டியடித்துள்ளதாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக பத்திரிகையாளர்களிடம் பேசிய தர்மதசா தான் தொழில் அதிபர் என்பதால் தீய ஆவிகளின் சக்தி தமக்கு தெரியும் என்பதால் இதில் தேர்ச்சி பெற்ற சூனியக்காரரை கொண்டு தீய ஆவிகளை விரட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். 


பொருளாதார நெருக்கடியால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 7 பில்லியன் இலங்கை ரூபாய்கள் பணப்பற்றாக்குறையால் உலக கோப்பையிலிருந்து வீர்ர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத்தை குறித்து கேட்கப்பட்ட போது சிறு சிறு பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று மழுப்பினார். ஏற்கனவே கடன் பாக்கி இருப்பதால் மார்ச்சில் இங்கிலாந்து செல்ல இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அறைகள் ஒதுக்க ஹோட்டல்கள் மறுத்த விவகாரம் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக