பாரதீய ஜனதா மட்டுமின்றி ஹசாரேவும், அவரது குழுவினரும் காங்கிரசின் புகழை கெடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்துவதாக ஹசாரே குழுவினர் கூறி வந்தாலும் அதை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும்தான்.
ஊழல் செய்த மந்திரிகளை நீக்கியதாக மாயாவதி கூறுகிறார். அப்படி என்றால் அவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்? மந்திரிகள் பதவி நீக்கம் வெறும் கண்துடைப்பு. தன்னை நேர்மையானவர், சுத்தமானவர் என்று காட்டிக் கொள்ள மாயாவதி கையாளும் தந்திரமான நடவடிக்கை இது.
ஊழலுக்காக பதவி நீக்கம் என்றால் முதலில் பதவி விலக வேண்டியவர் அவர்தான். பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் யுக்தியை அவர் கையாளுகிறார். பொதுவாக யானைகள் புற்களைதான் சாப்பிடும். உத்தரபிரதேசத்திலோ பணத்தை மேய்கின்றன என்று ராகுல்காந்தி கூறியது முற்றிலும் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக