திங்கள், ஜனவரி 23, 2012

சிறுபான்மையினரை வஞ்சிக்கிறது,மத்திய அரசு,எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக வஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவை தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாத்துடன்
இணைந்த சிறுபான்மை தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து வருகின்றது.
கூடங்குளத்தில் நடைபெற்று வரும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் இந்த நாட்டின் நலனில் உண்மையில் அக்கறைக் கொண்ட மக்கள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டமாகும். இந்த போராட்டத்திற்கு கிறிஸ்த்தவ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை அளித்து வருகின்றன என கூறுவது அபாண்டமாகும்.
தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் இவோன் அம்புரோஸ் அவர்களின் மேற்பார்வையில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெற்ற வந்த நிதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த நவம்பரில் 32 வினாக்களை எழுப்பியது. இந்த கேள்விகளுக்கு குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்கள் உரிய காலகெடுவிற்குள் பதில்களை அனுப்பி வைத்தன. இதன் பிறகு கடந்த ஜனவரி 10 முதல் 19 வரை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேரில் பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். இந்த சூழலில் இந்த தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதிகள் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக மத்திய அமைச்சர் நாரயணசாமி உட்பட காங்கிரஸ்காரர்களும் வேறு சில ஊடகவிகயலாளர்களும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சிறுபான்மை தொண்டு நிறுவனங்களில் வெளிநாட்டு பணத்தை அணு உலை எதிர்ப்பு பிராச்சாரத்திற்கு பயன்படுத்தவில்லை என அறிந்த மத்திய அரசு அணு உலையை எதிர்க்கும் மக்களை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் விஷம பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருவது சிறுபான்மையினருக்கு எதிராக தேசிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்தி வரும் ஒரு போராகவே கருதுகிறேன். சிறுபான்மையினருக்கு எதிரான இந்த கொடும் போக்கின் விளைவுகளை காங்கிரஸ் சந்தித்தே தீர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக