தாங்களாகவே பாகிஸ்தான் நாட்டுக்கொடியை தாசில்தார் அலுவலகத்தில் வைத்து ஏற்றிவிட்டு இதனால வரை முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தி பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் இன்று அவர்களே செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது. இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டு அதன் மூலம் வகுப்பு வாத கலவரங்களை தூண்டுவதற்காகவே இவ்வாறு செய்திருக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் கே.பி அஃப்சர், எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட தலைவர் ஃபஜலுல்லாஹ், செயலாளர் அமீன் முஹ்சீன் மற்றும் செயலாளர் தம்லிக் தாரிமி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக