இதுகுறித்து பேசிய விசுவ ஹிந்து பரிசத் அகில இந்திய
பொதுச் செயலாளர் தினேஷ் சந்தர் "இசுலாமியர்களுக்கு 4.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு மத மற்றும் ஜாதி ரீதியிலான மோதல்களைத் தூண்டக் கூடும். இது அபாயகரமானது. மேலும், இசுலாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது. சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளையும் அரசு ஏற்கக் கூடாது" என்று விஷம் கக்கியுள்ளார்.நாடுமுழுவதும் இசுலாமியர் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக விசுவ இந்து பரிசத் மற்றும் அதன் கொலைகார கூட்டாளிகள் கலவரங்கள் நடத்தியபோது, இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது என்பதிலிருந்து சாதி, மத மோதல்களுக்கு விசுவ இந்து பரிசத் சொல்லும் காரணம் பொருந்தவில்லை. மீரட், பாகல்பூர், குஜராத் ஆகிய இடங்களில் இசுலாமியர்கள் தாக்கப்பட்டதற்கும் ஒடிசா, கேரளா, தமிழகம்(மண்டைக்காடு) கலவரங்களில் கிறித்தவர்கள் தாக்கப்பட்டதற்கும் எந்த இட ஒதுக்கீடும் காரணமில்லை.
விசுவ ஹிந்து பரிசத் என்ற அதிபயங்கரவாத அமைப்பு நாட்டில் நடந்த பல்வேறு மதக்கலவரங்களில் குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை முன்னின்று நடத்தும் அமைப்பாகும். இதன் சர்வதேச தலைவர் தொகாடியாவின் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் இருந்தபோதிலும் இந்த அதிபயங்கரவாத அமைப்பை மத்திய அரசு ஏன் இன்னும் தடை செய்யாமல் விட்டு வைத்துள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது!
-ரஃபீக், கன்னியாகுமரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக