இத்தாலியை சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 11 பேர் பலியானார்கள். 29 பேரை காணவில்லை. இதையொட்டி கப்பல் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோ கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே விபத்துக் ள்ளான இந்த கப்பலில் பயணம் செய்தபோது பலியானவர்கள் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க கோரி இத்தாலி நுகர்வோர் உரிமைகள் கழகத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளனர்.
விபத்துக்குள்ளான கப்பலை அமெரிக்க தொழில் அதிபர் ஒருவர் இயக்கி வந்தார். அந்த நிறுவனத்திடம் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.80 லட்சம் நஷ்டஈடு கேட்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக