சமீப காலமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைவது தெரிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு டாலருக்கு 40 ரூபாய் இருந்த காலம் போய் சில மாதங்களாக 50 ரூபாய்க்கு மேல் டாலரின் மதிப்பு இருந்தது. அக்டோபர் 2011ன் உற்பத்தி புள்ளிவிபரங்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக வெளிவந்துள்ளது. இச்சூழலில் இன்று டாலர் ஏற்றத்துடன் தொடங்கியது. அனைத்து நாணயங்களுக்கும்
எதிராக டாலரின் மதிப்பு ஏறிய சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்தது.இன்று இது வரை இல்லாத அளவு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 53.30 ஆக குறைந்துள்ளது. உலகின் மிக அதிக மதிப்பு வாய்ந்த நாணயமான குவைத் தினார் ஒன்றின் மதிப்பு 192.50 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியே போனால் சேவாக்கை போல் இந்திய ரூபாயும் இரட்டை சதம் அடித்து விடும் போல் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக