புதன், டிசம்பர் 14, 2011

தமிழ்நாடு அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு உம்மன் சாண்டி, மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தல்


முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார் அவரது தலைமையிலான கேரள அனைத்து கட்சிக் குழுவினர் மன்மோகன் சிங்கை டெல்லியில் இன்று சந்தித்து மனு அளித்தனர்.
அதில், புதிய அணை கட்டி, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு பழைய அளவிலேயே தண்ணீர் வழங்க தயாராக உள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசு இதனை ஏற்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் 26 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டிவிட்டதாலும், அணைக்கு ஆபத்து என்றும் உம்மன் சாண்டி தலைமையிலான குழுவினர் பிரதமரிடம் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக