புதன், டிசம்பர் 14, 2011

பாகிஸ்தானுக்கு வழங்கி வரும், சுமார் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவியை நிறுத்த, அமெரிக்கா முடிவு

I.E.D. எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை கட்டுப்படுத்துவதில், பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நிதியுதவியை நிறுத்தலாம் என அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு எடு்த்துள்ளது. பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் இத்தகைய வெடிபொருட்கள்
, ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு எதிராக, தலிபான்  மூலம் பயன்படுத்தப்படுவதாக, அமெரி்க்கா குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், கடந்த மாதம், ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர், உயிரிழந்தனர். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் சிக்கல் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக