புதன், டிசம்பர் 14, 2011

வருடத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் - கவாஸ்கரின் கோரிக்கை நிராகரிப்பு


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளரும், பத்திரிக்கையாளருமான சுனில் கவாஸ்கர், தனக்கு தர ஒப்புக் கொண்ட சுமார் 1 மில்லியன் அமெரிக்கன் டாலர் பிசிசிஐ தராதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுவரை நடந்துள்ள ஐபிஎல்லின் விளையாட்டு போட்டிகளுக்கு, தான் வர்ணனையாளராக பணிபுரிந்தற்கு சரத் பவார்  ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் டாலர் (சுமார் 4 கோடி ரூபாய்) தர ஒப்புக் கொண்டதாகவும், அதனை பிசிசிஐ துணை தலைவர் அருன் ஜெட்லியும் தொலைபேசியில் உறுதி செய்ததாகவும் கூறிய கவாஸ்கர், தற்போது பிசிசிஐ ஆண்டு பொதுகூட்டத்தில் தனக்கு சேரவேண்டிய சம்பளம் நிராகரிக்கப்பட்டது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்ற திங்கட்கிழமை நடந்த பிசிசிஐ ஆண்டு பொது கூட்டத்தில் கவாஸ்கரின் சம்பள கோரிக்கை கடிதம்,உறுப்பினர்களின் முடிவுக்கு விடப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கவாஸ்கரின் சம்பள கோரிக்கையை நிராகரித்தனர். இது குறித்து பேசிய கவாஸ்கர், தான் பிசிசிஐ மீது வைத்திருந்த நம்பிக்கை தளர்ந்து விட்டதாக கூறியுள்ளார். முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியும் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு 4 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் பிசிசிஐ தனது சம்பள கோரிக்கையை நிராகத்திருப்பது தனக்கு எதுவும் புரியவில்லை என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக