70 சட்டசபை தொகுதிகள் கொண்ட டெல்லி மாநிலத்தில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது.டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. மொத்தம் 673 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவுத் தொடங்கியது. தொடக்கம் முதலே ஓட்டுப் பதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது. பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் காலை 7.30 மணிக்கெல்லாம் ஓட்டுச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 9 மணி நிலவரப்படி முதல் 1 மணி நேரத்தில் 5.64 சதவீத ஓட்டுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் மொத்தம் 1 கோடியே 33 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் 66 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இந்த தடவை வாக்குப் பதிவு சதவீதம் சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஓட்டுப்பதிவை அமைதி யாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக 12,171 ஓட்டுச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 714 ஓட்டுச்சாவடிகள் பதற்ற மானவை என்று கண்டறியப் பட்டு இருந்ததால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யபட்டிருந்தன.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தங்கள் இல்லம் உள்ள பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட்டனர். பா.ஜ.க. முதல்-மந்திரி வேட்பாளரகள் கிரண்பேடி மாளவியா நகரில் உள்ள ஓட்டுச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.ஆம் ஆத் மிகட்சி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் அஜய் மக்கான் ஆகியோரும் ஓட்டளித்தனர் காங்கிரஸ் தலைவர் சோனியா நிர்மன் பவனில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார்.
இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடை பெறும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் பெட்டிகளுக்குள் வைத்து சீல் செய்யப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக