வியாழன், பிப்ரவரி 12, 2015

டெல்லி இமாம் சையத் அகமது புகாரி பிறப்பித்த கட்டளையால் தோற்றேன்: கிரண் பேடி சொல்கிறார்

டெல்லி சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதி, பாரதீய ஜனதா சார்பில் தற்போதைய மத்திய மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தொகுதி ஆகும். பாதுகாப்பான தொகுதி என்பதால் இந்த தொகுதியில் கிரண் பேடி நிறுத்தப்பட்டார்.

ஆனால் இந்த தொகுதியில் சற்றும் எதிர்பாராத வகையில் அவர் தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.கே.பக்கா, கிரண் பேடியை விட 2,277 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தோல்வி குறித்து கிரண் பேடி நேற்று கூறியதாவது:-

கிருஷ்ணா நகர் தொகுதியில் நான் தோல்வியைத் தழுவியதற்கு காரணம், தேர்தலுக்கு முந்தைய நாள் டெல்லி ஜூம்மா மசூதி ஷாகி இமாம் சையத் அகமது புகாரி பிறப்பித்த  கட்டளைதான்.

அந்த கட்டளையில் அவர் முஸ்லிம்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறி இருந்தார்.

கிருஷ்ணா நகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையின்போது முதலில் நான் முன்னிலை பெற்றிருந்தேன். ஆனால் இமாம் சையத் அகமது புகாரி பிறப்பித்த  கட்டளை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என கருதப்படுகிற பகுதி ஓட்டுகள் எண்ணப்பட்டபோது முன்னணி ஓட்டு வித்தியாசம் குறையத்தொடங்கியது. அந்த பகுதி ஓட்டு எண்ணிக்கை முடிந்தபோது 2 ஆயிரம் ஓட்டுகளில் நான் தோல்வி அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக