அன்னை தெரசாவின் செயல்பாடுகளுக்கு பின்புலமாக இருந்தது மதமாற்றமே என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெரசாவின் சுயநல நோக்கத்தினால் ஒரு உன்னத காரணத்திற்கான நற்பண்புகள் மதிப்பிழந்து போய்விட்டதென்றும் பகவத் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் கிராமத்தில் தொண்டு நிறுவன விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதன் செயல்பாடுகளை வாழ்த்தி பேசினார். அப்போது "தன்னலமற்ற நோக்கத்துடன் கொண்ட ஒரு செயலை செய்வது நல்லது. ஆனால் அன்னை தெரசாவின் செயல்பாடு, சேவை என்ற பெயரில் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதாக இருந்தது” என்றார்.
அவருடன் விழாவில் கலந்து கொண்ட எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ் சிங் அவரை(அன்னை தெரசா) விட நிறைய தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக மக்களுக்கு சேவை புரிந்தன. ஆனால் கிறிஸ்துவர்கள், ஊடகங்களின் உதவியுடன் அவரை பிரபலமாக்கியதாக தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க வை சேர்ந்த சிலர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் கண்டனத்துக்குள்ளானது. இதையடுத்து கிறிஸ்துவ தேசிய விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘‘இந்தியாவில் மத நம்பிக்கைகள் போற்றப்படும். எனது அரசு அனைத்து மதங்களையும் சம மதிப்புடன் நடத்தும். மத வெறுப்பை தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது எபோழுதும் போல் வேடிக்கை பார்க்குமா
கடந்த சில மாதங்களாகவே மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க வை சேர்ந்த சிலர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவது வருந்ததக்கது. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக