செவ்வாய், பிப்ரவரி 10, 2015

தேசத்தந்தை என்னும் பட்டம் காந்திக்கு தேவையில்லாதது : விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பேச்சால் சர்ச்சை

சுதந்திரத்துக்கு பின் இந்து மதத்தை விட்டு வெளியேறி சென்ற 15 கோடி மக்களை மீண்டும் இந்து மதத்துக்கு திரும்ப கொண்டு வரும் வரை கார் வப்சி என்னும்  மறுமதமாற்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி ஆர்யா தெரிவித்துள்ளார்.
அலிகாரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சாத்வி பிரச்சி ஆர்யா கூறியதாவது:- ” சுதந்திரத்துக்கு பின் இந்துமதத்தை விட்டு வெளியேறிய 15 கோடி மக்கள் மீண்டும் தாய்மதம் திரும்பும் வரை  இந்துத்வா ஆதரவு அமைப்புகளால் தொடங்கப்பட்ட ”கார்வப்சி” என்னும் நிகழ்ச்சி, தொடர்ந்து நடைபெறும்.

தேசத்தந்தை என்னும் பட்டம் காந்திக்கு தேவையில்லாதது. ஏனெனில் சுதந்திரம் அடைவதற்கான உண்மையான தியாகத்தை பிறர் செய்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றதற்கான பெருமை தவறாக காந்தியிடம் சென்றுவிட்டது.

மேலும், அலிகார் நகரத்துக்கு  அதன் பண்டைய பெயரான ஹரிகார் என்று பெயர்சூட்டவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு இயக்கத்தை நாங்கள் தொடங்கவுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.பாரதீய ஜனதா லோக் சபா எம்.பி சதீஷ் கவுதம் மற்றும் மாநகர் மேயர் சகுந்தலா பாரதி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக