புதன், பிப்ரவரி 11, 2015

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்தி திரையுலகினர் வாழ்த்து

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு, இந்தி திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 


டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு இந்தி திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
 

அதன் விவரம் வருமாறு:- 

இசை அமைப்பாளர் விஷால் தத்லானி:- ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை கொண்டாடுவதற்காக விமானத்தில் நான் டெல்லிக்கு செல்கிறேன். தேர்தல் பிரசாரத்தின்போது நான் சந்தித்த ஒவ்வொருவருக்கும் இப்போது நன்றி சொல்கிறேன். 

இயக்குனர் அனுபவ் சின்கா:- இறுதியில், செயல்பாடுகள் எங்கு இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன். இதை பெருமையாகவே கருதுகிறேன். 

பிரிதீஷ் நன்டி:- இந்திய வரலாற்றில் ஆம் ஆத்மி பெற்ற இந்த வெற்றி மகத்தானது. 

தயாரிப்பாளர் சேகர் கபூர்:- ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து இளைய தலைமுறை வாக்காளர்கள், நாட்டுக்கு மிகவும் தெளிவான செய்தியை சொல்லிவிட்டார்கள். இது நமது தேசம். நமது எதிர்காலம். அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை, மெய்ப்பிக்கும் தருணம் அவருக்கு வந்துவிட்டது. 

இயக்குனர் ராம்கோபால் வர்மா:- ஆம் ஆத்மி கட்சியை நகைச்சுவையாக கருதியவர்கள், இப்போது பிறர் தங்களை பார்த்து நகைப்பதை உணர தொடங்கி விட்டனர். நகைச்சுவையை எண்ணி நகைக்காதீர்கள். பின், நகைச்சுவை உங்களை எண்ணி நகைக்க ஆரம்பித்துவிடும். 

ரித்தேஷ் தேஷ்முக்:- டெல்லியில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள். 

இதேபோல் நடிகை தியா மிர்ஷா, டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் ரகுராம் உள்ளிட்ட பலரும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக