செவ்வாய், பிப்ரவரி 03, 2015

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது

வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கிறது. காஷ்மீர், இமாசலபிரதேம் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்வது போல் பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.

தலைநகர் ஸ்ரீநகரில் சாலைகளில் பனி உறைந்து கிடக்கிறது. வீடுகளின் கூரைகள், மரங்கள் வெள்ளை போர்வையை போர்த்தியது போல் பனிப்பொழிவால் மூடிக்கிடக்கின்றன. குப்வாரா நகரில் அரை அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் காணப்படுகின்றன. குல்மார்க் பகுதியில் சில இடங்களில் பனிப்பாறைகள் சரியும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பனிக்கட்டிகள் உறைந்து கிடப்பதால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மூடப்பட்டது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையும் மூடப்பட்டு உள்ளது.

இதேபோல் எல்லையோரத்தில் அமைந்துள்ள மச்சில், கெரன், கர்னா, தங்தார், நீரு, தீத்வால் ஆகிய சிறு நகரங்களுக்கு செல்லும் சாலைகளும், எல்லை கட்டுபாட்டு கோட்டையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகளிலும் பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக