செவ்வாய், பிப்ரவரி 10, 2015

குத்துச்சண்டை வீரர் முகமது அலி பயன்படுத்திய கையுறைகள் 21ஆம் தேதி ஏலத்தில் வருகின்றன.

உலகின் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றான, ரோமில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி பயன்படுத்திய  கையுறைகள் ஏலத்திற்கு வருகின்றன விளையாட்டு உலகில் ’தி கிரேட்’ என்றழைக்கப்படும் குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, உலகின் மிகவும்  ஆபத்தான குத்துச்சண்டை வீரராக அறியப்பட்ட சோனி லிஸ்டன் ஆகியோர் மோதிய போட்டியில் அவர்கள் இருவரும் பயன்படுத்திய கையுறைகள் வரும்  பிப்ரவரி 21ஆம் தேதி ஏலத்தில் வருகின்றன. 
  
1960 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் மிகு எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முகமது அலி, அதன் பின்னர்,  களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். 1965ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றிலேயே ஒரே குத்தில்  சோனி லிஸ்டனை முகமது அலி வெளியேற்றினார். இப்போட்டி உலக குத்துச் சண்டை வரலாற்றில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக இன்றளவும்  திகழ்ந்து வருகிறது.

இப்போட்டியில் முகமது அலி, லிஸ்டன் ஆகியோர் பயன்படுத்திய கையுறைகள் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள  விளையாட்டு பொருள்கள் அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக