வியாழன், பிப்ரவரி 19, 2015

தீஸ்தா செதல்வாட்டை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கடந்த 2002-ம் குஜராத் கலவரத்தின்போது, ஆமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டிக்கு கலவரக்காரர்கள் தீ வைத்ததில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜாப்ரி உள்பட 69 பேர் பலியானார்கள். அந்த இடத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக, சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டும், அவருடைய கணவர் ஜாவீது ஆனந்தும் நிதி திரட்டினர். 

ஏறத்தாழ ரூ.1 கோடியே 51 லட்சம் நிதி திரண்டது. ஆனால், அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதே சமயம் திரட்டப்பட்ட பணத்தை தீஸ்தா செதல்வாட் திருப்பி தரவில்லை தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது . இது தொடர்பான புகாரின்பேரில், குஜராத் குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தீஸ்தா, ஜாவீது ஆனந்த் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு செசன்சு கோர்ட் மற்றும் குஜராத் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்ட்டது. இதையடுத்து, தீஸ்தாவும், அவருடைய கணவரும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் இருவரும் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகினர். தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவிடம், தீஸ்தா சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் இப்பிரச்சினை குறித்து முறையிட்டார். 

இந்நிலையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆதர்ஷ் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று மீண்டும் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வியெழுப்பினர். சுதந்திரத்தின் மீதான மதிப்பை வானில் உள்ள நட்சத்திரத்துடன் கூட ஒப்பிட முடியாது என கூறிய நீதிபதிகள் விசாரணை செய்வதற்காக ஏன் இருவரையும் கைது செய்யவேண்டும் என கேள்வி கேட்டனர். இது ஒன்றும் கிரிமினல் வழக்கல்ல. பின் எதற்கு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்ட நீதிபதிகள், இருவரையும் கைது செய்வதற்கு எதிரான தடை தொடரும் என உத்தரவிட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக