சனி, பிப்ரவரி 28, 2015

கேரளாவில் பெருகிவரும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதம் : கம்யூனிஸ்டு பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை

கேரள மாநிலம் கோழிக்கோடு குத்துப்பரம்பை அடுத்துள்ளது சித்தரபரம்பை சேர்ந்த யோகபாலனின் மகன் பிரேமன் (வயது 44). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகியான இவர் பத்திரிக்கை ஏஜெண்டாகவும், கள்ளுக்கடை ஊழியராகவும் இருந்தார்.

நேற்று மாலை பிரேமன் வேலை முடிந்து தனது நண்பர் மனோகரனுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு நடந்து சென்றார். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் வந்தது.திடீரென வெடிகுண்டுகளை வீசியது. இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிதறி ஓடினர்.

பிரேமனை நோக்கி வந்த கும்பல் அரிவாளால் ஆவேசமாக பிரேமனின் 2 கால்களையும் வெட்டி துண்டாக்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரேமனின் நண்பர் மனோகரன் ஓட்டம் பிடித்தார்.2 கால்களையும் இழுந்த பிரேமன் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். வெறி அடங்காத கும்பல் உயிருக்கு போராடிய பிரேமனை மீண்டும் சரமாரியாக வெட்டினர். பிரேமனின் உடல் முழுவதும் அரிவாளால் கந்தையாக்கிய கும்பல் கார், மோட்டார் சைக்கிளில் தப்பியது.

½ மணி நேரத்துக்கு பின்னர் பிரேமனை மீட்ட பொதுமக்கள் தலச்சேரி கூட்டுறவு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்டு நிர்வாகி பிரேமன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து குத்துப்பரம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தரப்பில் கூறும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான் இந்த கொடூர கொலையை செய்திருக்க வேண்டும் என்று கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக