ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

எபோலாவுக்கு பெற்றோரை பறிகொடுத்து விட்டு 3600 குழந்தைகள் அனாதைகளாக நிற்கும் அவலம்

லைபீரியா, சியாரா லியோன் மற்றும் கினியா நாடுகளில் உயிர்க்கொல்லி நோயான எபோலாவுக்கு பெற்றோரை பறிகொடுத்த 3600 குழந்தைகள் அனாதையாக நிற்பதாக ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் வேதனை தெரிவித்துள்ளது.
இதில், தாய் அல்லது தந்தை அல்லது இருவரையுமே இழந்த இளந்தளிர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்தில் 16,600 ஆக இருந்ததாகவும், அவர்களை தத்து எடுத்து வளர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்து சில தொண்டு நிறுவனங்களும், நல்லெண்ணம் கொண்ட குடும்பங்களும் முன்வந்ததன் விளைவாக தற்போது 3600 குழந்தைகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதியத்தின் பாதுகாப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய மருத்துவ கண்காணிப்புக்கு பின்னர் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சில நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் எபோலாவினால் கடந்த 2 ஆண்டு காலத்தில் 22,495 மக்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் சுமார் 9 ஆயிரம் பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக