அமெரிக்காவில் உள்ள மேடிசன் சிட்டியில் தனது மகனின் இல்லத்தில் தங்கியிருந்த அப்பாவி இந்தியரான சுரேஷ் பாய் பட்டேலை போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதில் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், தன் மகன் சிராக் படேல் வீட்டிற்கு சென்ற அவர், வீட்டருகே நடைபயிற்சி சென்ற போது போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, தனக்கு ஆங்கிலம் தெரியாது என படேல் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் அவரை குற்றவாளி போல் கருதிய போலீசார் அதிகாரிகள் படேலை முரட்டுத்தனமாக கீழே தள்ளினர். அந்நாட்டு முறைப்படி சுரேஷ் பாயின் கையை பின்புறமாக திருப்பி, தரையில் முகத்தை அழுத்தி முதுகில் தாக்கியுள்ளனர். இதில் அவரது முதுகு தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்து போனது. இதனால் நிமிர்ந்து நிற்க முடியாமல் படுக்கையிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் படேல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மனதாபிமானமே இல்லாமல் 57 வயது முதியவரான சுரேஷ் பாயை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதையடுத்து சுரேஷ்பாயை தாக்கிய போலீஸ் அதிகாரி எரிக் பார்க்கரை இன்று எப்.பி.ஐ. கைது செய்தது. அவரிடம் விசாரணை நடத்தவும் எப்.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக