ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

பா.ஜனதா தோல்வி அடைந்தால், நான் பொறுப்பு; கிரண் பேடி

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்தால், நானே பொறுப்பேற்பேன் என்று அக்கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். 

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 7–ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. டெல்லி சட்டசபை தேர்தலில் 67 சதவீத ஓட்டுகள் பதிவானது.

 டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மல்லுக்கட்டுகிறது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவை அடுத்து கிரண் பேடி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பாரதீய ஜனதா வெற்றிபெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதற்கு நானே பொறுப்பு ஏற்றுக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக