டெஹ்ரான்:ஈரான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என ஈரானின் முப்படை தலைமை தளபதி மேஜர ஜெனரல் ஸய்யித் ஹஸ்ஸன் ஃபிருஸாபாதி அறிவித்துள்ளார்.சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் 40 சதவீதம் கடந்து செல்லும் ஹோர்முஸ் ஜலசந்தியை பொறுத்தவரை ஈரான் முடிவு விவேகமானது என்று அவர்
தெரிவித்துள்ளார்.
ஈரான் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு கவுன்சிலும், உயர் தலைவரும்தான் இவ்விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பார்கள் என்று ஸய்யித் ஹஸ்ஸன் கூறினார்.
மேற்கத்திய நாடுகளின் எண்ணெய் தடைக்கு எதிராக ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இது பிராந்தியத்தில் மோதல் சூழலை உருவாக்கி இரு தரப்பிலும் அறிக்கைப் போருக்கு வழி வகுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக