கெய்ரோ:இஸ்ரேல் முதல் எதிரி என்று அறிவிக்கும் தீர்மானம் எகிப்து பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
இஸ்ரேல் தூதரை நாட்டைவிட்டு வெளியேற்றவும், இஸ்ரேலுக்கான எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தவும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் அவையில் அரபு விவகார கவுன்சில் இத்தீர்மானத்தை தயாரித்தது. பாராளுமன்ற எம்.பிக்கள் ஒரு மனதாக இத்தீர்மானத்தை ஆதரித்தனர்.
‘புரட்சிக்கு பிந்தைய எகிப்து ஒருபோதும் சியோனிச தேசத்தை நண்பராகவோ, பங்காளியாகவோ, கூட்டணி நாடாகவோ ஆகாது. எகிப்து மற்றும் அரபுலகின் முதல் எதிரியாகவே இஸ்ரேலை நாங்கள் பார்க்கிறோம். இஸ்ரேலை எதிரியாக கருதி அவர்களுடன் ஏற்படுத்திய அனைத்து ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய எகிப்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்’ இவ்வாறு அத்தீர்மானம் கூறுகிறது.
1979-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எகிப்து, இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது. இஸ்ரேலுக்கு இயற்கை எரிவாயுவை அளிக்க இந்த ஒப்பந்தம் கூறுகிறது. இஸ்ரேலுக்கு தேவையான 40 சதவீத எரிவாயுவை அளிப்பது எகிப்து ஆகும். இந்த ஒப்பந்தத்தை ரத்துச்செய்ய பெரும்பாலான எகிப்திய மக்கள் கோரிக்கை விடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக