திங்கள், மார்ச் 05, 2012

இஸ்ரேலிய பெண்ணை நாட்டை விட்டு வெளியேற்றியது இந்தியா !

இஸ்ரேல் நாட்டு பெண் எழுத்தாளர் விவகாரம்: நாடு கடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவுஇஸ்ரேலை சேர்ந்தவர் சூசன்நாதன். இவர் இங்கிலாந்தில் பிறந்தவர். பெண் எழுத்தாளரான இவர் ”தி அதர் சைடு ஆப் இஸ்ரேல்” என்ற புத்தகத்தை எழுதுவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவிற்கு வந்து கோழிக்‌‌‌கோடு மாவட்டத்தில் தங்கியிருந்துள்ளார். இவர் எழுதிய புத்தகம் குறித்து விசாரணை நடத்திய மத்திய புலனாய்வு பிரிவினர் இவர் எழுதியுள்ள புத்தகங்கள் பிரிவி‌‌னைவாதத்தை தூண்டுவதாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் அவரது விசா காலம் முடிவடைந்தது. ஆனாலும், அவர் நாடு திரும்பவில்லை. இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.
 
தலைமை நீதிபதி மஞ்சுளாசெல்லூர், ஆர்.ஆர்.ராமச்சந்திரா மேனன் மற்றும் மஞ்சேரி சுந்தர் ராஜ் ஆகியோர் முன்னிலையில் இவரது வழக்கு விசாரணைக்கு வந்தது.
 
விசாரணையின் முடிவில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் நாடு கடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக