சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் குறித்து முக்கிய முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012-2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா துறை வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில், துறை வாரியான திட்டங்கள், அவற்றிற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்கலாம் என்ற பச்சைக் கொடி காட்டப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னெச்சரிக்கையாகத்தான், கூடங்குளத்தைச் சுற்றிலும் தற்போது பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதனால் கூடங்குளம் விவகாரத்தில் முக்கியத் திருப்பம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக