வெள்ளி, மார்ச் 09, 2012

ஆஃப்கானில் குண்டுவெடிப்பு:ஆறு பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் பலி !

6 British Soldiers Are Killed in Afghanistanஹெல்மந்த்:தெற்கு ஆப்கானிஸ்தானில் ஹெல்மந்தில் சாலை அருகே குண்டுவெடித்து ஆறு பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் வெடிக்குண்டில் மோதி குண்டுவெடித்துள்ளது. இதில் 5 பேர் யார்க்‌ஷையர் ரிகைமெண்ட் பட்டாலியனை சார்ந்தவர்கள். ஒருவர் ட்யூக் லங்காஸ்டர்ஸ்
ரிகைமெண்டை சார்ந்தவர்.
இச்சம்பவம் மிகவும் துக்ககரமானது என்று பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார். ராணுவத்தினரின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காந்தஹார் மாகாணத்தில் மோதல் சூழல் மிகுந்த ஹெல்மந்தில் ரோந்து சுற்றி வந்த ராணுவ வீரர்கள் இக்குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளனர்.
இச்சம்பவத்திற்கான பொறுப்பை எவரும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பை நடத்தி வரும் பிரிட்டீஷ் ராணுவம் இதுவரை 404 வீரர்களை இழந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானம் தகர்ந்து வீழ்ந்து 14 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக