ஆப்கானிஸ்தானின் வடமேற்கில் பதாக்ஷான் மாகாணம் மலைப்பகுதிகளால் ஆனது. தற்போது இங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஷிகாய் மாவட்டம் முழுவதும் பனி மூடிக்கிடக்கிறது. இந்த நிலையில், அங்குள்ள ஒரு கிராமம் பனிச்சரிவில் சிக்கி மூழ்கியது. இதனால், அங்கிருந்த பெரும்பாலான வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கின.
தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். அதற்குள் பனிக்கட்டிக்குள் சிக்கி 37 பேர் உயிர் இழந்தனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் மேலும் பலர் பனிக்குள் சிக்கி கிடக்கின்றனர்.
அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள தஜிகிஸ்தானுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். பதாக் ஷான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப் பொழிவு நிகழ்கிறது. அதில், சிக்கி கடந்த 2 நாட்களில் 35 குழந்தைகள் இறந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக