அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது. இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை.
காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை.(மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை
ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது. அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்.. தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது).
அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான். ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.
அவர்கல் சூழ்ச்சி செய்கிரார்கல் அல்லாஊ அவர்களுக்கு சூழ்ச்சி செய்கிரான் சூழ்ச்சி அலனுக்கேல்லாம் அவனே சூழ்ச்சி அலான்
பதிலளிநீக்குஎன்ற வசனத்தை பர்த்தால் அந்த அமறிக்கனுக்கு தெறியும்
அதேபொல் அமேறிக்காவும் ஈரானும் பொர் செய்தால் ஈரானுக்கே வெற்றி நிச்சயம்
இன்ஷா அல்லா