இந்நிலையில் அவர் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட் தாசில்தார் அலுவலகத்திற்கு இவ்வழக்கு சம்பந்தமாக சென்றார்.
அப்பொழுது அவரது வேனை சூழ்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஷாஹினாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவ்வேளையில் சுற்றிலும் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கலைந்து செல்ல கோராமல் வேடிக்கை பார்த்தனர். இதனால் துணிச்சல் பெற்ற அவர்கள் ஷாஹினாவின் மீது கல்லை வீசி தாக்கினர்.
இத்தாக்குதல் குறித்து ஷாஹினா கூறுகையில்; “நான் முன்னரே மூத்த போலீஸ் அதிகாரியை அழைத்து பாதுகாப்பு அளிக்குமாறு கோரியிருந்தேன். ஆனால் சோம்வார்பேட் போலீஸ் எனக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டது.” என தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக ஷாஹினாவின் வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ் கூறுகையில்; “இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளோம். அதில் வட்டார போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக