
2. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, போராட்டத்திற்கு ஆள் சேர்க்கவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கும், பணம் தேவைப்படுகிறது.
3. இதனால் பணம் வரும் பின்னணி குறித்து விளக்கம் அளிக்கும்படி, போராட்டத்தை முன்னின்று நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4. கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.அறவழிப் போராட்டம் என்ற பெயரில், வன்முறை போராட்டம் நடக்கிறது.
5. நாராயணசாமி புகார்: உதயகுமார் படபடப்பு. உதயகுமாருக்கு, வெளிநாடுகளில் இருந்து, தொண்டு நிறுவன நிதி வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, உதயகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது மிகவும் பதட்டமாகிவிட்டார். வழக்கமாக போராட்டங்கள் குறித்து நிறுத்தி, நிதானமாக பேசும் வழக்கமுடைய உதயகுமார்.
தினமலருக்கு பதில்: கூடங்குளம் அணு அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தினமலம் நாளிதழ் கொச்சைபடுத்தி வருகிறது. ஹிந்துத்துவா இயக்கங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று கொக்கரிகின்றன. அவர்களுக்கு ஆதரவாக ஹிந்துத்துவா பயங்கரவாத நாளேடான தினமலம் தினமும் தனது பத்திரிகையில் வாந்தி எடுத்து வருகின்றது.
வழக்கமாக உதயகுமார் நிதானமாக பேசுவாராம் தினமலர் நிருபர் இப்படி கேட்டது பதட்டம் ஆகிவிட்டாராம் தினமலத்தின் திரிபு வாதங்களை பாருங்கள். இப்படி கேவலமாக கேள்வி கேட்டவர்களுக்கு அவர் கோபமாக பதில் சொன்னதை தினமலம் திரித்து பதட்டம் என்று எழுதுகிறது.தமிழக அரசு முழு ஒத்துழைப்பு, அறவழி போராட்டம் என்கிற பெயரில் வன்முறை போராட்டம் இப்படி பத்திரிகை முழுவதும் மலம் கழித்து வைத்துள்ளது தினமலம்.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதை ஒடுக்க மத்திய அரசு போராட்ட குழு தலைவர்களை பின்வாங்க செய்ய வெளிநாட்டில் இருந்து பணம் வருகின்றது என்று சொல்லி பூச்சாண்டி காட்டி மக்கள் எழுச்சியை அடக்கி விடலாம் என்று திட்டமிடுகிறது.
பார்பன தினமலமும் அதன் ஹிந்துத்துவா கோட்டான்களும் எப்படியாவது கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விடவேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகின்றன. அதேநேரம் பாதுகாப்பான, தமிழகத்திற்கு அதிக வருமானத்தை கொடுக்கும் சேது சமுத்திர திட்டத்தை "ராமர் பாலம்" என்று சொல்லி தடுத்தவர்கள்தான் இந்த இராமாயண வானர கூட்டங்கள்.
ஜப்பானை நேரில் பார்த்த பிறகும் இந்த நாசகார திட்டத்தை தமிழன் தலையில் தள்ளி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழனை மீண்டும் ஒரு இன அழிப்புக்கு உள்ளாக்கும் திட்டமே கூடங்குளம் அணு நாசகார திட்டம். தமிழர்கள் ஓர் அணியில் நின்று இதை எதிர்க்க வேண்டும். விஷ செடியில் பூத்த விஷ மலராகிய தினமலரை அழித்து ஒழிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகமும் தமிழர்களும் நிம்மதியாக இருக்க முடியும்.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக