செவ்வாய், டிசம்பர் 13, 2011

ஒட்டன் சத்திரம் காய்கறிச் சந்தையில் இருந்து, கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக, ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில், அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு, கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட, அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு, நாளொன்றுக்கு 500 டன் காய்கறிகள் அனுப்பப்படும் என்றும், இந்தப் போராட்டத்தால், 4 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரள அரசின் பிடிவாதம் நீடித்தால், காய்கறிகள் அனுப்புவதை தொடர்ந்து நிறுத்துவோம் என, காய்கறி வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக