திங்கள், ஜூலை 02, 2012

கத்தீல் சித்தீகி சிறைக்கு வெளியே கொலைச் செய்யப்பட்டார் – சகோதரர் குற்றச்சாட்டு !

Shakeelதர்பங்கா:குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீல் சித்தீகி சிறை அதிகாரிகள் கூறும் தேதிக்கு முன்பே சிறைக்கு வெளியே வைத்து கொலைச் செய்யப்பட்டார் என்று அவரது சகோதரர் ஷக்கீல் சித்தீகி கூறுகிறார்.கத்தீல் சிறை அறையில் வைத்துக் கொலைச் செய்யப்பட்டார் என்று
போலீஸ் கூறுவது பொய் என்று ஷக்கீல் சித்தீகி தெரிவித்துள்ளார்.
கடந்த 8-ஆம் தேதி கத்தீல் சிறை அறைக்குள் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார். சக கைதிகளுடன் நடந்த மோதலில் அவர் கொலைச் செய்யப்பட்டார் என்று சிறை அதிகாரிகள் கூறினர்.
ஆனால் போலீஸே, கத்தீலை வேறு எங்கேயோ கொண்டு சென்று கொலைச் செய்ததாக ஷக்கீல் குற்றம் சாட்டுகிறார்.
கத்தீல் கொலைச் செய்யப்படுவதற்கு 2 தினங்களுக்கு முன்பு புனே போலீசுடன் பேசும் பொழுது, இரண்டு தினங்களுக்குள் கத்தீல் குறித்த செய்தி வெளியாகும் என்று போலீஸ் தெரிவித்ததாக ஷக்கீல் கூறுகிறார்.
“2 தினங்களுக்குள் கத்தீல் கொலைச் செய்யப்பட்டார். 8651290326 என்ற தொலைபேசி எண்ணில் போலீசுடன் பேசினேன். தொலைபேசியில் பேசிய போலீசார் தங்களது பெயரை தெரிவிக்கவில்லை. கத்தீல் தற்பொழுது புனேயில் இல்லை என்றும் மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையின் கஸ்டடியில் இருப்பதாகவும் போலீஸ் காரர் கூறினார். அங்குள்ள தொலைபேசி எண்ணை கேட்டபொழுது போலீஸ்காரர் கோபமாக பேசினார். நான் மீண்டும் அங்குள்ள தொலைபேசி எண்ணை கேட்டபொழுது 2 நாட்கள் காத்திருக்குமாறும் 2 தினங்களுக்குள் உனது சகோதரனைக் குறித்து ஒரு செய்தியை கேட்பாய் என்றும் தெரிவித்தார். கத்தீல் ஜூன் 8-ஆம் தேதிக்கு முன்பே கொல்லப்பட்டுள்ளார் என்பது குறித்து எனக்கு உறுதி உள்ளது.
ஜூன் 6-ஆம் தேதி மதியம் கத்தீல் புனேயில் ஒரு எண்ணில் இருந்து மனைவியின் மொபைலுக்கு அழைத்து இருந்தார். மிகவும் சோர்ந்தது போல அவரது குரல் இருந்தது. கத்தீல் கடுமையாக சித்திரவதைச் செய்யப்பட்டுள்ளான் என நான் சந்தேகிக்கிறேன். இவ்வேளையில்தான் அவன் கொலைச் செய்யப்படிருக்க வேண்டும்.
கத்தீலிடம் பேசுவதற்காக புனே போலீசுக்கு நாங்கள் தொலைபேசியில் அழைப்போம். ஆனால், கத்தீலை தொடர்பு கொள்ள முடியாது. ஒரு வாரம் கழித்து தொலைபேசியில் அழைக்குமாறு போலீஸார் கூறுவார்கள். கத்தீலின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்.” இவ்வாறு ஷக்கீல் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக