வியாழன், மார்ச் 08, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மதிமுகவுக்கு SDPI ஆதரவு !

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி இறந்ததால் அந்தத் தொகுதிக்கு இடைதேர்தல் அர்விக்கபட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, தேதிமக, மதிமுக உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், SDPI கட்சி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களிடம் பேசும்போது,


"இப்பொழுது உள்ள சூழ்நிலையில் பல மக்கள் பிரச்சினைகளுக்காக உறுதியுடன் போராடும் கட்சி மதிமுக. மேலும் நம்மிடம் வந்து ஆதரவு கேட்டதன் அடிப்டையில் மதிமுக விற்கு SDPI ஆதரவு கொடுக்கிறது. இந்தத் தேர்தலால் ஆட்சி மாற்றம் எதுவும் நடைபெறாது. ஆனால் ஆளும் கட்சின் குறைகளைச் சுட்டி காட்ட இது வாய்ப்பாக அமையும். அதனால் மதிமுக வேட்பாளர் சதன் திருமலை குமார் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு சங்கரன்கோவில் தொகுதி மக்களை கேட்டுக்கொள்கிறேன்."

என்று அவர் கூறினார்.
பேட்டின் பொழுது SDPI மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக், மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி, மாவட்ட பொது செயலாளர் சிந்தா அலி, மாவட்ட செயலாளர் பிஸ்மி காஜா மற்றும் ஹபீப் ரஹ்மான், மாவட்ட துணை தலைவர் நசீர்கான், தேசிய செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவுத் மற்றும் மாவட்ட, நகர உறுப்பினர் பலர் உடன் இருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக