கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் சிகிட்சை பெற வந்த வாய் பேசாத அப்பாவியான இளம்பெண்ணை காமவெறிப் பிடித்த மருத்துவர் மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்புணர்வுச் செய்துள்ளார். பங்குரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நெஞ்சு வேதனையை தொடர்ந்து தனது தாயாருடன் பரிசோதனைக்கு வந்துள்ளார் ஸஜ்துரா பகுதியைச் சார்ந்த 18 வயது பெண். அப்பொழுது பணியில்
சைகையில் தனக்கு நேர்ந்த கொடுமையை மகள் கூறியதாக தாயார் போலீஸில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவுச்செய்தனர்.
மேல் சிகிட்சைக்காக இளம்பெண் கொல்கத்தா ஆரோக்கிய மையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அப்பெண்ணின் ஆடைகள், பெட்சீட் ஆகியன தடவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதார அமைச்சகத்தில் இரண்டு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அதேவேளையில் மருத்துவமனை நிர்வாக இது போலியான குற்றச்சாட்டு என்று மறுத்துள்ளது. மாநிலத்தில் அண்மையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்தது அரசியல் விவாதத்தை கிளப்பியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக