மத்தியகிழக்குப் பிராந்தியம் தற்போது இருக்கும் சூழ்நிலையில், அங்கே இன்னுமொரு நெருக்கடியைச் சந்திக்கும் நிலை இல்லை. எனவே, ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய எந்த ஓர் இராணுவத் தாக்குதலும் மத்தியகிழக்கின் ஸ்திரத்தன்மையை மிகத் தீவிரமாகப் பாதிக்கும். அத்தோடு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலிய நாடுகள் அதன் மோசமான எதிர்விளைவுகளையும்
அனுபவிக்கவேண்டி இருக்கும்" என துருக்கிய அரசியல் இதழுக்கு அளித்த நேர்காணலின்போது ஜோர்தானிய அதிபர் அப்துல்லாஹ் II கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (05.03.2012) இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் செல்லவுள்ளார். இந்த இராஜதந்திர சந்திப்பின்போது, ஈரானுடைய அணுச்சக்திவளப் பாவனை குறித்தும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்படும் என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவும் நிலையிலேயே ஜோர்தானிய அதிபர் அப்துல்லாஹ் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக ஈரானின் அணுச்சக்திவளப் பாவனையை எதிர்த்து இஸ்ரேலிய இராணுவ மற்றும் அரசியல் தரப்பினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள், அமெரிக்கா மூலம் விடுக்கப்பட்ட பொருளாதாரத் தடைகுறித்த மிரட்டல்கள் அனைத்தையும் மீறி, ஈரான் தன்னுடைய அணுச்சக்திவளம் தொடர்பான செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக