வியாழன், மார்ச் 01, 2012

இரண்டு மீனவர்கள் கொலை வழக்கில் பணம் கொடுத்து வழக்கை முடிக்க இத்தாலி சதி !

Italy minsiter meet s.m.krishna for fishermen death
 கேரள மாநிலம் கொச்சி கடலில் தமிழக மீனவர்கள் 2 பேர் கடந்த 15-ந்தேதி இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கொச்சி கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், சரக்கு கப்பலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இத்தாலி கப்பல் நிறுவனம் கோரியது.
அதற்கு ரூ.3 கோடி முன் பணமாக கொடுத்துவிட்டு கப்பலை எடுத்துச்செல்லுமாறு நீதி மன்றம் கூறிவிட்டது. இந்நிலையில், இந்தியா வந்துள்ள இத்தாலி வெளியுறவு துறை மந்திரி கொய் லியோ டெர்ஸி, டெல்லியில் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரமும் பேசப்பட்டது. இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த இத்தாலி மந்திரி, இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். இந்த யோசனையை எஸ்.எம்.கிருஷ்ணாவும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இந்த பிரச்சினையால், இரு நாடுகளின் உறவு பாதிக்க கூடாது என்பதற்காக, இத்தாலி மந்திரியின் இந்த யோசனைக்கு கிருஷ்ணா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கோர்ட்டுக்கு வெளியே சமரச தீர்வுகாண முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நியாயமான நஷ்டஈடு கிடைக்கச் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இன்னும் ஓரிரு நாளில் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரச்சினை நீண்டு கொண்டே செல்வதை இருதரப்பும் விரும்பவில்லை என்பதால் விரைவில் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நியாயமான நஷ்டஈடு கிடைக்கச் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாளில் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரச்சினை நீண்டு கொண்டே செல்வதை இருதரப்பும் விரும்பவில்லை என்பதால் விரைவில் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக