வியாழன், மார்ச் 01, 2012

25 ஹாக்கர்கள் கைது !

hackersபாரிஸ்:உலக நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்திய ஹாக்கர்களின் குழு சிக்கியுள்ளது. தென் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நடந்த தீவிர பரிசோதனையில் ஹாக்கர்கள் என சந்தேகிக்கப்படும் இருபத்தைந்து நபர்கள் இண்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனானிமஸ் ஹாக்கர் மூவ்மெண்ட் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள்
கைதாகியுள்ளதாக கருதப்படுகிறது.
அர்ஜெண்டினா, சிலி, கொலம்பியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் பரிசோதனை நடந்ததாக இண்டர்போல் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 17-40 ஆகும்.
கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதிபரின் இணையதளங்களை சீர்குலைக்க இவர்கள் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் ஹாக்கர்கள் குறித்து இண்டர்போல் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக