கவுதமாலா நாட்டில் 1980களில் ஆயுதபுரட்சி ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்த அந்தநாட்டுப் படைகள் குவிக்கப்பட்டன. 1982 டிசம்பரில் லாஸ் தோஸ் எரஸ் என்ற கிராமத்தில் ஆயுதங்களை தேடி 20 வீரர்கள் நுழைந்தனர். கண்ணில் பட்ட ஆண்களை சுட்டுத் தள்ளியும் சுத்தியலால் அடித்தும் கொன்றனர். பிணங்களை 50 அடி ஆழ கிணற்றில் கடந்த ஆண்டு இறுதியில் விசாரணைக்காக அவர் கவுதமாலா கொண்டு வரப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வெளியானது. ஈவு இரக்கமின்றி 201 பேரை கொன்று குவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஒரு கொலைக்கு 30 ஆண்டு என்ற கணக்கிலும், மனித குலத்துக்கு எதிரான குற்றத்துக்காக 30 ஆண்டுகளும் சேர்த்து பெட்ரோவுக்கு 6,060 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
எனினும், இது அடையாள தண்டனை விதிப்பு என்பதால் அதிகபட்ச சிறை தண்டனையான 50 ஆண்டுகளுக்கு பெட்ரோ சிறையில் இருப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக