வியாழன், ஜூன் 13, 2013

என்.டி.ஏவுக்கு மூடு விழா? புதிய கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளம் அச்சாரம்!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு தேர்தல் பிரச்சாரக் கமிட்டி தலைவர் பதவி வழங்கப்பட்டதை கண்டித்துபா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி எழுப்பிய சவால், அக்கட்சியை ஆட்டம் காணவைத்தது. இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியில் வெளியேறி புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடத்துவங்கியுள்ளது. இதனால் என்.டி.ஏ கலகலத்துப்போகும் என கருதப்படுகிறது.  ஏற்கனவே மோடியுடன் மோதலை கடைப்பிடித்து வந்த ஐக்கிய ஜனதா தளம், 17 ஆண்டுகள் பா.ஜ.க உடனான உறவை முறிக்க முடிவுச் செய்துள்ளது. 20 மக்களவை உறுப்பினர்களை கொண்ட என்.டி.ஏவில் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை விட்டு விலகியது பா.ஜ.கவின் கனவுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் ஆயுத விற்பனை?

பாகிஸ்தானுக்கு அதி நவீன ராணுவத் தளவாடங்களை இஸ்ரேல் வழங்கி வருவதாக பிரிட்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த ஆயுத விநியோகம் நடந்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரீஸ் செய்தி நிறுவனம் மூடல்! : செய்தி நிறுவனமே செய்தியானது!

கிரீஸ் நாட்டில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோதே ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் சுமார் 2,700 பேருக்கு உடனடியாக வேலை பறிபோனது. கீரிஸ் நாட்டின் தேசிய தொலைக்காட்சி நிறுவனமான ஈ.ஆர்.டி (ERT) நிறுவனத்தின்

கருத்து மோதலினால் கொரிய நாடுகளின் பேச்சு வார்த்தை முயற்சி தோல்வி!

தென் கொரியாவுடன் நல்லுறவை காக்க வட கொரியா அக்கறை காட்ட வேண்டும் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. சரிசமமான அதிகாரிகளை பேச்சு வார்த்தைக்கு நியமிப்பதில் இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கொரிய நாடுகளுக்கிடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும், நாளையும் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னிற்கு நெருங்கிய மூத்த அதிகாரி தென் கொரியாவிற்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு அதிகாரி வருவார் என அறிவிக்கப்பட்டது.

முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கான கல்லூரி:புத்த தீவிரவாத அமைப்பு எதிர்ப்பு!

கொழும்பு:இலங்கையில் முதன் முதலாக முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கான(உலமாக்கள்)பல்கலைக் கழகம் ஒன்று துவங்கப்படுவதற்கும்புத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா மன்னன்  அப்துல்லாவின் பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பல்கலைக்கழகக் கல்லூரி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை ஹிரா பவுன்டேசன் நிறுவனத்தின் தலைவரான இலங்கை பொருளாதார வளர்ச்சித்துறை துணை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இளைஞர் வளர்ச்சி திறன் அமைச்சர் டலஸ் அழகபெரும் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத சமூகம் நாகரீகமான சமூகம் அல்ல!-பிரணாப்!

புதுடெல்லி: பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத எந்தவொரு சமூகத்தையும் நாகரிகம் அடைந்ததாகக் கருத முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். டெல்லியில் தேசிய பெண்கள் ஆணைய தலைமையகக் கட்டட அடிக்கல் நாட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16-ம் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உயிரிழந்த 23 வயது மருத்துவ மாணவியின் நினைவாக “நிர்பய பவன்’ என்ற பெயரில் இக்கட்டடம் கட்டப்படவுள்ளது.

செவ்வாய், ஜூன் 11, 2013

2020ம் ஆண்டில் வளர்ச்­சி­யடைந்த நாடாக இருக்கும் பிர­த­மர் நஜிப் !

கோலாலம்­பூ­ரில் நேற்று நடை­பெற்ற ஆசிய எண்ணெய், எரிவாயு மாநாட்­டில்  முக்கிய உரை­யாற்­றிய மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் துன் ரசாக், முத­லீட்­டா­ளர்­களின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்கு பொரு­ளி­யல் தாரா­ள­ம­யக் கொள்கை­கள் தேவை என்று கூறினார். 

இந்தோனேசிய பயணிகள் விமானம் விபத்து !

இந்தோனேஷியாவில் ஒரு கிழக்கு விமான நிலையத்தில் இ தாரியில் நேற்றுக் காலை தரை இறங்கிய மெர்பாத்தி நுசந்தாரா ஏர்லைன்ஸ் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இரு பயணிகள் காயமுற்றனர்.

எங்களுக்கு உதவுவதில் இந்தியா நன்பேண்டா! - இலங்கை அமைச்சர்!

இலங்கைக்கு ஏதாவது என்றால் முதலில் ஓடிவரும் நட்பு நாடாக இந்தியா உள்ளது என்று இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷே கூறினார். அமைச்சர் பஷில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவின் இளைய சகோதரர் என்பது குறிக்கத்தக்கது. இலங்கையில் உள்நாட்டுப் போரினால் வீடிழந்த தமிழர்களுக்கு சுமார் 50,000 வீடுகளைக் கட்டித் தர இந்தியா முன்வந்தது. அதன்படி கட்டப்பட்ட 4,000 வீடுகளுக்கான திறப்பு விழா பட்டீகோலாவில் நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக அமைச்சர் பசில் பேசுகையில்:

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஈரான் அதிபர் தேர்தல்!

ஈரானில் அதிபர் தேர்தல் வரும் 14-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 4 பேர் களத்தில் இருந்த நிலையில், நாடாளுமன்ற முன்னாள்

பா.ஜனதாவின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! - காங்கிரஸ்!

பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த முயற்சி நடந்து வருகிறது. மோடியை நியமிப்பதால் மக்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று பா.ஜனதா கணக்கு போட்டுள்ள நிலையில், மோடியின் நியமனத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

திங்கள், ஜூன் 10, 2013

"கடுப்பில் இருக்கும்பொழுது பொறுப்பா" - பா.ஜனதாவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அத்வானி ராஜினாமா!

எதிர்பார்த்ததை போலவே பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த ராஜினாமா கடித்தில் கூறியிருப்பதாவது:- 

பாஜக பிரசாரக்குழு தலைவராக மோடி! பாரதிய ஜனதாவை ஒரு போட்டியாக கருதவில்லை! - காங்கிரஸ்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதாவின் பிரசாரக் குழு தலைவராக குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி  நியமிக்கப்பட்டுள்ளதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. அதே நேரத்தில், மூத்த தலைவர் அத்வானியின் ஒப்புதலுடனேயே மோடி நியமிக்கப்பட்டதாக பாரதிய ஜனதா மீண்டும் சமாளித்ததுள்ளது.

அத்வானி புறக்கணிப்பு விவகாரம்! : உடைகிறது பாஜக?

கோவா தலைநகர் பனாஜியில் பாஜகவின் 3 நாள் தேசிய செயற் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ராஜ்நாத் சிங் முதல் முக்கிய தலைவர்கள் அனைவரும் கோவாவில், குழுமியிருக்கும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் எல்கே அத்வானி தம் வாழ்நாளில் முதன்முறையாக பாஜகவின் தேசிய செயற் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார். 

ஞாயிறு, ஜூன் 09, 2013

தலித் மாணவன் தலையில் செருப்பு மதுரையில் கொடுமை !

  • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செருப்பு அணிந்து நடமாடிய தலித் மாணவனை தலையில் செருப்பை சுமக்க செய்து தண்டனை வழங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

பாஜக தேசிய செயற்குழு: அத்வானி புறக்கணிப்பு !

  • கோவாவில் நடைபெற்று வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி புறக்கணித்தார்.  குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவமும் கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் பதவியும் அளிக்கப்படுவதை எதிர்த்து அவர் இக்கூட்டத்தைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

சனி, ஜூன் 08, 2013

விரைவில் வெடிக்க இருக்கும் மோடி ‘பலூன்’ : சரத்பவார்!

இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல்வாதியாக மாற்ற முயற்சிக்கப்பட்டு தோல்வியை தழுவிய மோடியை, அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பலூனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்வார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “எனது 40-50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பல பலூன்கள் விரைவில் வெடித்ததை பார்த்திருக்கிறேன்” என்றார். 

மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது!: விஞ்ஞானிகள் தகவல்!

ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி  நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

அத்வானி கோஷ்டியினரை அடித்து சென்ற மோடி கோஷ்டி! - ஷகீல் அகமது!

கோவா தலைநகர் பனாஜியில்இன்று (சனிக்கிழமை) தொடங்குகிற பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் உடல் நலக்குறைவால் அத்வானி கலந்துகொள்வாரா என்பது உறுதியாகவில்லை.

சிரியாவுக்கு மிகப் பெரிய உதவி! - ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மனிதாபிமான அடிப்படையிலான மிகப் பெரிய நிதியுதவி சிரியாவுக்கு அளிக்கப்பட இருக்கிறது.

அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும்!: துருக்கிப் பிரதமர்!

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என துருக்கிப் பிரதமர் தய்யிப் எர்துகான்  தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை புறந்தள்ளி வன்முறைகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார். வெளிநாட்டுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பிய துருக்கியின் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தளங்களின் சர்வர்களை உளவு பார்க்கும் அமெரிக்கா!

கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பல முன்னணி வலைத்தளங்களின் சர்வர்களில் நுழைந்து அமெரிக்கா உளவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிநபர்களைக் குறிவைத்து மைக்ரோசாஃப்ட்டின் ஹாட்மெயில், யாஹு, கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள், யூடியூப், அமெரிக்கன் ஆன்லைன், ஸ்கைப் உள்ளிட்ட 9 முன்னணி நிறுவனங்களின் சர்வர்களில் நுழைந்து, அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. உளவு பார்ப்பதாக அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் போஸ்ட்' மற்றும் பிரிட்டனின் 'தி கார்டியன்' பத்திரிகையும் செய்தி வெளியிட்டன.

சீனாவில் பரிதாபம்!- பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 38 பயணிகள் உடல் கருகி பலி! (வீடியோ இணைப்பு)

சீனாவின் பியூஜியான் மாகாணத்தின் ஜியாமென் நகரில் நேற்று  மாலை ஏராளமான பயணிகளுடன் சென்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஜின்ஷான் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சென்ற போது இத் தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளி, ஜூன் 07, 2013

தலித் மாணவர்களின் தற்கொலை:மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்!

புதுடெல்லி: இந்தியாவின் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் சந்திக்கும் பாரபட்சம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் 18 தலித் மாணவர்கள் தற்கொலைச் செய்துள்ளனர். இதனை பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மாலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது! – மத்திய உள்துறை இணை அமைச்சர்!

புதுடெல்லி: 2006-ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையும், சி.பி.ஐயும் குற்றவாளிகளாக சேர்த்து கைதுச் செய்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறியுள்ளார். இத்தகைய தவறுகள் இனி  நடக்காது என்றும், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைத்தது சரியான நடவடிக்கை என்றும் சிங் மேலும் தெரிவித்துள்ளார். 

ஈரானும் ஹிஸ்புல்லாவும் சிரியாவில் இருந்து வெளியேற வேண்டும்' - அமெரிக்கா !

  • ஈரான் அதன் லெபனானிய கூட்டாளிகளான ஹிஸ்புல்லாஹ்  அமைப்பும் சிரியாவில் இருந்து தமது படைகளை பின்வாங்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

உலகில் 5 வயதுக்கு முன்பாக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை போஷாக்கின்மையாலேயே அதிகம் !

உலகில் 5 வயதுக்கு முன்பாக இறக்கும் குழந்தைகளில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் போஷாக்கின்மையாலேயே இறப்பதாக மருத்துவ சஞ்சிகையான லான்செட்டில் வெளியான ஆய்வு ஒன்று கூறியுள்ளது. அத்துடன் இந்த இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அது கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மையின் விளைவுகளால் இறப்பதாக அது கூறுகிறது.

யு.ஏ.பி.ஏ (UAPA) சட்டத்திற்கு எதிராக தொடர் பிரச்சார இயக்கம்!-எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு தீர்மானம்!

எஸ்.டி.பி.ஐ(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநில செயற்குழு நேற்று  (06.06.2013) மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.  மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹமது வரவேற்றார், மாநில பொதுச் செயலாளர்கள் நெல்லை முபாரக். நிஜாம் முகைதீன், பி. அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அன்புமணி ராமதாசு கும்பகோணத்திற்குள் நுழைய தடை !

கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் பகுதியிலிருந்து ஏராளமான வன்னியர்கள் மகாபலிபுரத்திற்கு சென்றனர். அப்போது மரக்காணம் என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ்சேரியைச் சேர்ந்த விவேக் (வயது17) என்பவர் இறந்தார். இதையடுத்து பா.ம.க.வின் கட்சி நிர்வாகிகள் தேவனாஞ்சேரிக்கு சென்று விவேக்கின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிவாரண நிதியை வழங்கினர்.

மன்னர் திப்பு சுல்தானுக்கு மணி மண்டபம்!: கண்டன சுவரொட்டி ஒட்டிய பயங்கரவாதி கைது!

திண்டுக்கல்: ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர்களுள் மைசூர் புலி ஹைதர் அலீயும் அவர் மகன் திப்பு சுல்தானும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இரு மன்னர்களுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப் போவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் அதற்கான இடங்களை அடையாளங் காணும் பணி தொடங்கி சுமார் 10 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

மிகப்பெரிய கலவரத்துக்கு காரணம்மான காதல் ஜோடி பிரிந்தது !


தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவரும் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்தாண்டு ஆகஸ்டு 8ம் தேதி இளவரசன், திவ்யா இருவரும் ஓடி சென்று திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் தரப்பில் கடத்தல் என்று புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் சேர்ந்து வாழும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வியாழன், ஜூன் 06, 2013

முஸ்லிம் மையங்களை தாக்குவதற்கு மஹராஷ்ட்ரா, மத்திய பிரதேச ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இடையே நெருங்கிய தொடர்பு -என்.ஐ.ஏ!

முஸ்லிம் மையங்களை தாக்குவதற்கு மஹராஷ்ட்ராவிலும், மத்திய பிரதேசத்திலும் உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளது.

முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்திய போலீஸ்! – வழக்கை வாபஸ் பெற உ. பி அரசு முடிவு!

புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் குண்டுவைத்ததாக போலீஸ் அநியாயமாக குற்றம் சாட்டிய ஷமீம் அஹ்மத் என்ற முஸ்லிம் இளைஞர் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கை வாபஸ் பெற உ.பி அரசு முடிவுச் செய்துள்ளது. 2006-ஆம் ஆண்டு கொடோலியாவில் ஜமுனா ஃபதகில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் ப்ரஷர் குக்கர் குண்டை ஷமீம் தான் வைத்தார் என்ற போலீஸின் கூற்றை உ.பி அரசு நிராகரித்துள்ளது.

திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றால் அபராதம்! : சீனாவில் சட்டம்!

திருமணமாகாது குழந்தை பிறந்தால் அந்த தம்பதியினருக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் குறித்து சீனா கவனம் செலுத்தியுள்ளது. சீனாவில் உள்ள சீஜியாங் என்ற இடத்தில் பொது கழிவறை குழாயில் பிறந்த குழந்தை ஒன்று சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டது. திருமணம் ஆகாத பெண் ஒருவர் இந்த குழந்தையை பெற்றெடுத்து கழிவறை குழாய்க்குள் வீசி இருந்தது தெரிய வந்தது.

இஸ்ரேல் தூதரக அதிகாரி கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! பின்னணியில் மொஸாத்?

இஸ்ரேல் தூதரக அதிகாரி பயணித்த கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் சர்வதேச எண்ணெய் லாபியும், அரசாங்கத்தின் சில தீய சக்திகளுமே காரணம் என்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது காஸ்மி நீதிமன்றத்தில் கூறியுள்ளார். தான் இவ்வழக்கில் நிரபராதி என்று அவர் தெரிவித்தார்.

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு: மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கைது!

கடந்த 2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ கைது செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்ட் என்.கே அமீனை, நேற்று சிவில் மருத்துவமனையில் வைத்து சி.பி.ஐ கைது செய்தது.

கிரிக்கெட் வீரர்கள் மீது மோக்கா(MCOCA) சட்டம்! : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 22 பேர் மீது மோக்கா-MCOCA(மஹராஷ்ட்ரா அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கடுமையான பிரிவுகளை பிரயோகித்தது கண்டனத்திற்குரியது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் நன்றி!

சென்னை: தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்கள் அரசு பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே, மற்றும் பெண்கள் அரசு பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற உத்தரவிற்க்கு மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேம்பஸ் ஃப்ரண்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புதன், ஜூன் 05, 2013

ஆசியாவில் அதிகரிக்கும் அணு ஆயுதங்கள்! : ரஷ்யா முதலிடம்!

உலக அளவில் அணுஆயுத இருப்பு பற்றிய புள்ளி விவரங்களை சிப்ரி (SIPRI) எனப்படும் ஸ்டாக்ஹாம் இண்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Stockholm International Peace Research Institute) வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் அணு ஆயுதங்கள் குறைந்திருந்த போதும் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் அணுஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சிரியப் போரில் ரசாயன ஆயுதம்! - ஐக்கிய நாடுகள் சபை!

கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்துவரும் சிரியாவில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை பெயர் மாற்றியாவது நிறைவேற்றுங்கள்! கருணாநிதி வேண்டுகோள்!

தமிழக பொருளாதாரத்திற்கு வலுச் சேர்க்கும் சேது சமுத்திர திட்டத்தை கிடப்பில் போடாமல் ராமசந்திர மூர்த்தி திட்டம் என மாற்றியாவது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலித் முஜாஹித் :விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்- குடும்பத்தினர் முடிவு!

ஜாவன்பூர்: போலீஸ் கஸ்டடியில் மரணித்த காலித் முஜாஹிதின் கைதுத் தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இம்மாதம் 6-ஆம் தேதிக்குள் விசாரணை கமிஷனின் அறிக்கையை வெளியிடாவிட்டால் உ.பி மாநில சட்டப்பேரவைக்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்போவதாக காலித் முஜாஹிதின் மாமனார் ஸஹீர்ஆலம் ஃபலாஹி தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டிற்காக 5 பல்கலைக்கழகங்கள்!-மத்தியஅமைச்சர் ரஹ்மான் கான்!

புதுடெல்லி:சிறுபான்மையினர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறைஅமைச்சர் கே.ரஹ்மான் கான் கூறியுள்ளார்.

ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி அதன் மீது புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் ஈரான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது என்றாலும் பொருளாதாரத் தடையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா தற்போது விதித்துள்ளது.

திங்கள், ஜூன் 03, 2013

நரேந்திர மோடியை விட சிவ்ராஜ் சிங் சவுகான் தான் பெஸ்ட் - அத்வானி கருத்து!

குவாலியர் : பின் தங்கி இருந்த மத்திய பிரதேச மாநிலத்தை முன்னேற்றம் அடைந்த மாநிலமாக உருவாக்கிய சிவ்ராஜ் சிங் சவுகான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்று அடக்கமான மனிதர் என்று பாஜகவின் மூத்தத் தலைவர் எல்.கே அத்வானி பேசியிருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர வெடிமருந்து லாரி கடத்தலும் ஊடக நேர்மையும்!

ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்கி" என்ற கிராமப்புற சொல்வடைக்குப் பொருத்தமானவை செய்தி ஊடகங்கள் எனும் அளவுக்கு நம்நாட்டுச்செய்திகளின் தரம் தாழ்ந்துவிட்டது. பெரும்பாலான ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகின்றன. சாதி, மத, சிந்தாந்த ஆதரவு அல்லது அவற்றுக்கெதிரான கருத்துருவாக்கக் கருவிகளாகவே ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. கீழ்கண்ட செய்தியிலுள்ளவை மிகவும் அதிர்ச்சியளிக்கும் விடயம். எனினும், இதைச் செய்தியாக்கியுள்ள ஊடகங்களின் நேர்மையை அளவிடுவதற்கு இதன் உள்ளடக்கமே சாட்சி.

ரெட்க்ராஸ் அலுவலகம் மீதான தாக்குதலில் எங்களுக்கு பங்கில்லை – தாலிபான் மறுப்பு!

காபூல்:கிழக்கு ஆப்கானில் உள்ள ரெட்க்ராஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தங்களுக்கு பங்கில்லை என்று தாலிபான் போராளிகள்அறிவித்துள்ளனர்.ரெட்க்ராஸ் நடத்தும் போலியோ மருந்து விநியோகத்தை தாங்கள் முற்றிலும் ஆதரிப்பதாகவும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரெட்க்ராஸ் ஆர்வலர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தாலிபானின் செய்தி தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.சுதந்திரமாக இயங்கும் எந்த அமைப்பையும் தாங்கள் தாக்கமாட்டோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இஷ்ரத் போலி என்கவுண்டர்:போலீஸ்-ஐ.பி கூட்டுச் சதி!-முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி வாக்குமூலம்!

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், போலீஸ்-ஐ.பி கூட்டுச் சதி என்று இவ்வழக்கில் கைதான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இஸ்ரேலில் ஃபலஸ்தீனர்கள் கூட்டாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு!

டெல் அவீவ்: 1948-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்த போரின் போது யூத சியோனிஸ்டுகள் கூட்டுப்படுகொலைச் செய்த ஃபலஸ்தீனர்களை கூட்டாக புதைத்த  கல்லறைகள் டெல் அவீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.