செவ்வாய், ஜூலை 16, 2013
திங்கள், ஜூலை 15, 2013
போலி என்கவுண்டர்களின் சூத்திரதாரி ஐ.பியின் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார்!
மும்பை: இதர மாநிலங்களில் இருந்து சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களை குஜராத்திற்கு கடத்தி வந்து போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலைச் செய்யும் சதித்திட்டத்தில் முக்கிய சூத்திரதாரி ஐ.பியின் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் என்று அவுட்லுக் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2002-05 வரை குஜராத்தில் ஐ.பி ஸ்டேஷன் தலைவராக இருந்த ராஜேந்தர் குமார், மோடியின் நெருக்கமான நண்பர் என்று அவுட்லுக் ஆதாரத்துடன் கூறுகிறது.
நாடாளுமன்றத்தாக்குதலை நடத்தியது பாஜக அரசு தான்!-முஸ்லிம்களை கருவறுக்க கையாண்ட சதி அம்பலம்!

புதுடெல்லி: பாராளுமன்றத் தாக்குதலையும், மும்பை தாக்குதலையும் திட்டமிட்டு நடத்தியது மத்திய அரசு என்றும், தீவிரவாத தடுப்புச் சட்டங்களை உருவாக்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு பிரபலமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஷ்ரத் வழக்கில் மத்திய அரசுக்காக பிரமாணப்பத்திரம் தயாரித்த முன்னாள் அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, சதீஷ் வர்மா இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு: எஸ்.பி ஈஸ்வரன் பதவியிறக்கம்!
நெல்லை: நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO). என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால், இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங், டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி கொலை வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.அஸ்ஸாமில் ரிஹாபின் 6-வது கட்ட நிவாரண பணிகள் துவக்கம்!
பொங்கைகான்:அஸ்ஸாமில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் துவக்கியுள்ளது. ரிஹாபின் 5-வது கட்ட நிவாரண பணிகளின் வருடாந்திர அறிக்கையை(2012-13) பொங்கைகான் மாவட்ட துயர்துடைப்பு துறை ப்ரொஜக்ட் ஆஃபீஸர் பங்கஜ் சவுத்ரியிடம் ஒப்படைத்துவிட்டு ரிஹாபின் சேர்மன் இ.அபூபக்கர் ஸாஹிப் 6-வது கட்டமாக இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை துவக்கி வைத்தார்.
முஸ்லிம்களை பற்றிய மோடியின் கருத்து மனிதத்தன்மையற்றது- K.K.S.M.தெஹ்லான் பாகவி!
இது தொடர்பாக SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு நரேந்திர மோடி “ராய்ட்டர்” செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டிக்கத்தக்கது! மனிதத்தன்மையற்றது!! மோடி பெரும் சிந்தனையாளர், தேசியவாதி நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் என்று BJP மற்றும் அதன் அதரவு ஊடகங்களால் ஏற்ப்படுத்தப்பட்ட பிம்பத்தை அவர் உடைத் தெரிந்துள்ளார்.
வெள்ளி, ஜூலை 12, 2013
கோத்ரா ரெயில் எரிப்புக்கு முன்பே குஜராத் அரசு கலவரத்திற்கு அனுமதி கொடுத்தது!-ஸாகியா ஜாஃப்ரி!
அஹ்மதாபாத்: கோத்ரா ரெயில் தீவைக்கப்பட்ட சம்பவத்திற்கு முன்பே குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்திற்கு குஜராத் உள்துறையும் அரசியல் தலைமையும் அனுமதி அளித்துள்ளது என்றும் இதற்கு சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலேயே ஆதாரம் இருப்பதாகவும் ஸாகியா ஜாஃப்ரியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இஷ்ரத் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்!-பாதுகாப்பு வழங்க தயார் மத்திய அரசு!
குஜராத்தில் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் குடும்பத்தினர், மர்ம நபர்களால் கொலை மிரட்டல் வருவதாக புகார் கூறியுள்ளனர். உரிய பாதுகாப்பு வழங்க தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ராவை சேர்ந்த 19 வயது இளம்பெண் இஷ்ரத் ஜஹான். இவர் ஜாவேத் சேக் என்கிற பரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி, அக்பர் அலி ராணா மற்றும் ஜீஷான் ஜோஹர் ஆகியோருடன் சேர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலீசாரால் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இஷ்ரத் கொலை வழக்கு: பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான ஐபி அதிகாரி!-திக்விஜய்சிங்
கடந்த 2004-ஆம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் குஜராத்தில் காவல்துறை அதிகாரிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். 'தீவிரவாதி' என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டதாக காவல்துறை கூறியது. பின்னர் இஷ்ரத் அப்பாவிப் பெண் என்று மத்திய புலனாய்வுத் துறையால் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.
வியாழன், ஜூலை 11, 2013
2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றோர் தேர்தலில் போட்டியிட முடியாது!
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பின்னரும் கூட எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளில் நீடித்துக் கொண்டிருப்போருக்கு வேட்டு வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தாமஸ் லில்லி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகளுக்கு சில விளக்கங்களைக் கொடுத்தது.
ஊழல் மற்றும் லஞ்சத்தில் இந்தியா சாம்பியன்!: சர்வதேச ஆய்வில் தகவல்!
உலகளாவிய அளவில் நடந்த 'ஊழல் அளவுக்கோல் 2013' சர்வேயில் முதல் இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. 'டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனர்' என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 270 பேரிடம் இந்த சர்வேயை நடத்தியது. இந்த சர்வேயில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாக 70 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதன், ஜூலை 10, 2013
அமெரிக்க சிறையில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை! - திடுக்கிடும் தகவல்
உலக நாடுகளுக்கு எல்லாம் மனித உரிமை பற்றி போதித்து வரும் அமெரிக்க சிறையில், பெண்களுக்கு பலவந்தமாக கருத்தடை அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 148 பெண் கைதிகளை சிறை மருத்துவர்கள் வற்புறுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக புலனாய்வு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
செவ்வாய், ஜூலை 09, 2013
குண்டுவெடிப்பு சம்பவத்தை மியான்மர் கலவரத்தோடு ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்! எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் ஏ.சயீது வேண்டுகோள்!
எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் ஏ.சயீது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: பீகார் மாநிலம் காயாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற புத்த கோவிலில் ஜுலை 7 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை எஸ்.டி.பி.ஐ வன்மையாக கண்டிக்கிறது. ஆனால் இந்த சம்பவத்தை சில ஊடகங்கள் மியான்மரில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையோடு ஒப்பிட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது.
வெள்ளை மற்றும் கறுப்புத் தாடிக்காரர்களின் உருவப்பொம்மையை எரித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!
புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்த சம்பவத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போலி செய்திகளை பரப்பி விசாரணை திசை திருப்புவதற்கான சில ஐ.பி அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் நடத்தும் முயற்சிகளை கேம்பஸ் ஃப்ரண்ட் கண்டித்துள்ளது.
முர்சிக்கு ஆதரவாக திரும்பிய தவக்குள் கர்மான்!
நோபல் பரிசு பெற்ற ஏமனிய போராளியான சகோதரி தவக்குள் கர்மான், அதிபர் முர்சிக்கு எதிராக தான் முன்னர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற்றுள்ளார். இதுக்குறித்து தன்னுடைய முகப்பக்கத்தில் அவர் தெரிவிக்கும் போது "(அதிபர் முர்சிக்கு எதிரான) மிகப்பெரிய திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தில் நான் பலியாகிவிட்டேன். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை பதவி விலக வற்புறுத்தியதற்காக உலக மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன்" என்று கூறியுள்ளார்.
அப்பாவி ஜமால் மீது போலி என்கவுண்டர் - ரகசிய திட்டம் அம்பலம்!
அஹ்மதாபாத்: அஹ்மதாபாத்தில் ஜமால் என்ற இளைஞரை 2003ஆம் ஆண்டு போலி என்கவுண்டர் மூலம் படுகொலைச் செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியின் ரகசிய திடட்டம் அம்பளமாகியுள்ளது. அஹ்மதாபாத்தில் அப்பாவியான ஜமால் என்ற இளைஞரை 2003-ஆம் ஆண்டு போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த வழக்கில் ஐ.பி.க்குள் கருத்துவேறுபாட்டை உருவாக்கியுள்ளது. நரேந்திரமோடி மற்றும் பிரவீன் தொகாடியா ஆகியோரை ஜமால் கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளார் என்பதாக 3 ரகசிய புலனாய்வு அறிக்கைகளை ஐ.பி வெளியிட்டுள்ளது. இதில் கடைசி அறிக்கையை தயாரித்தவர் ராஜேந்தர் குமார் ஆவார். முதல் இரண்டு அறிக்கைகளை ராஜேந்தர் குமாருக்காக யாரோ தயாரித்திருக்கலாம் என்று சி.பி.ஐ சந்தேகிக்கிறது.
திங்கள், ஜூலை 08, 2013
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் ராமர்கோயில் கட்டப்படுமாம்! - அமித் ஷா கூறுகிறார்!
பாஜக ஆட்சிக்கு வந்ததும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக பொறுப்பாளர் அமித் ஷா தெரிவித்தார். குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் முதல்வர் நரேந்திர மோடியின் கூட்டாளியுமான அமித் ஷா, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சனிக்கிழமை வருகை தந்து வழிபாடு நடத்தினார். உத்தரப் பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக பதவி ஏற்றபின் முதல் முறையாக அவர் வந்துள்ளார்.
எகிப்து:முர்சிக்கு ஆதரவாக களமிறங்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள்!- துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!
கெய்ரோ: ஜனநாயகரீதியாக முதன் முதலாக எகிப்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்சியை ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து நீக்கியதை கண்டித்து பல்லாயிரக்கணக்கான இஃவானுல் முஸ்லிமீன் உறுப்பினர்களும், முர்ஸியின் ஆதரவாளர்களும் எகிப்தின் வீதிகளை ஸ்தம்பிக்கவைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.ஏராளமானோருக்கு காயம்ஏற்பட்டுள்ளது.
ஞாயிறு, ஜூலை 07, 2013
வியாழன், ஜூலை 04, 2013
எகிப்த்: அறுபது வருடப் பிரச்சினைகளை ஒரு வருடத்தில் எவ்வாறு தீர்க்க முடியும்?- யூசுஃப் அல் கர்ளாவி!
ஒன்பது சாகாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..! ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமானஅரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் பிடிக்காது.
ஃபலஸ்தீனுக்கு இந்தியா 10 லட்சம் டாலர் நிதி உதவி!
புதுடெல்லி: மேற்காசியா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஃபலஸ்தீனுக்கு இன்று செல்லவிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத், இந்தியாவின் உதவியாக 10 லட்சம் டாலர் தொகையை அந்நாட்டின் பிரதமர் டாக்டர் ராமி அப்துல்லாஹ்விடம் அளிப்பார்.ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் நேற்று இ.அஹ்மத், ஜோர்டானில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
எகிப்தில் அராஜகம்!-முஹம்மது முர்ஸியை ஆட்சியில் இருந்து நீக்கியது ராணுவம்!
கெய்ரோ: 30 வருடங்கள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் அராஜகமான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தின் இறுதியில் எகிப்தில் முதன் முறையாக நடந்த ஜனநாயகரீதியான தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்ற முஹம்மது முர்ஸியை அந்நாட்டின் ராணுவம் ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது. அதிபர் முர்ஸியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியதாக ராணுவம் அறிவித்துள்ளது.
2013 ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை திட்டம் அறிவித்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!
புதுடெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற "பள்ளி செல்வோம்" பிரச்சாரத்தின் இறுதியாக பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தடையில்லாமல் தொடர்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
செவ்வாய், ஜூலை 02, 2013
இந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகத்தை உளவு பார்த்தது அமெரிக்கா!
வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் உளவு பார்த்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய எட்வர்டு ஸ்நோடென், தன் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைப்பின் அத்துமீறல் உளவு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை பதிவு செய்த லேப்டாப்புடன் கடந்த மாதம் ஹாங்காங்குக்கு தப்பி வந்தார். அங்கு அந்த ஆவணங்களை உலகுக்கு வெளியிட்டார்.
மோடியின் பிரதமர் வேட்பாளர் கனவு! - அடுத்தடுத்து வேட்டுவைக்கும் அதிர்ச்சிகர உண்மை தகவல்கள்!
பிரதமர் வேட்பாளர் கனவில் வலம் வரும் குஜராத் முதல்வர் மோடியின் எதிர்பார்ப்புகளுக்கு பலத்த பின்னடவை ஏற்படுத்தும் அதிர்ச்சிகர உண்மைத் தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. கேதார்நாத்தில் சாகச வீரனாக மாறி 15 ஆயிரம் பேரை காப்பாற்றினார் என்று போலியான வீர கதையை ஊடகங்களில் பரப்புரைச் செய்த சம்பவம் பெரும் அவமானத்தையும், பா.ஜ.கவுக்கு தொந்தரவாகவும் மாறியுள்ளது.
வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெட்டிக் கொலை!
வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூரில் பதட்டம் ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்து முன்னணியினர் வன்முறையில் இறங்கினர். பஸ் நிலையத்திற்குள் புகுந்து பஸ்களின் கண்ணாடிகள் உடைத்தனர். மேலும் காவல்துறையினரையும் அடிக்க பாய்ந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














































