புதன், மார்ச் 09, 2011

என்னுள் இந்திய ரத்தம் கலந்திருக்கிறது - துன் மகாதீர்!!!

என்னுள் இந்திய ரத்தம் கலந்திருக்கிறது. ஆனாலும் நான் மலாய்க்காரரே... அதனால் நான் பெருமையே கொள்கிறேன் என துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். என்னுள் இந்திய ரத்தம் கலந்திருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் அது அதன் அடிதளத்தை நான் அறிந்திருக்கவில்லை என அவர் அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். 'எ டொக்டர் இன் தி ஹவுஸ்' என்ற புத்தகத்தில் அவர் தனது நினைவலைகளை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
நான் ஒரு மலாய்காரர். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். நான் வெறும் கடிதம் அளவில் மட்டுமே மலாய்க்காரர் அல்ல. உணர்வாலும் உணர்சிகளாலும் நான் மலாய்காரரே என்றார். சிலர் எனது தந்தை மலையாளி எனவும் தமிழ் மற்றும் மலையாள மொழியில் தெளிவாக பேசக்கூடியவர் என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் அவர் ஒரு இந்து எனவும் என் தாயாரை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் இஸ்லாமியராக மாறினார் என்றும் எழுதுகின்றனர் என அவர் எழுதியுள்ளார். மேலும் தாம் பதவி வகித்த காலத்தில் தவறுகள் செய்த போது மலாய் ரத்தம் இருப்பதாகவும் சிலர் தூற்றியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் நல்லது செய்யும் போது இந்திய ரத்தம் இருப்பதாகக் கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக