வியாழன், ஜூலை 18, 2013
எகிப்து:முர்ஸி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு! - 7 பேர் பலி!
கெய்ரோ: எகிப்தில் பதவி விலக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த இரவு நடந்த மோதல்களில் கெய்ரோவில் 7 பேர் கொல்லப்பட்டிருக்கிறார். தலைநகரில் ஒரு முக்கிய வீதியில் போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரார்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.
இஷ்ரத்தின் பெயரை ஹெட்லி கூறவில்லை - என்.ஐ.ஏ!
புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் லஷ்கர் - இ - தய்யிபா போராளி இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற ஐ.பி மற்றும் குஜராத் போலீஸின் கூற்று பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. இஷ்ரத்தின் பெயரை ஹெட்லி கூறவில்லை என்று குறிப்பிட்டு என்.ஐ.ஏ, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.ஐ.பி இதே வாதத்தை முன்னர் கூறியபோதும் அதனை என்.ஐ.ஏ மறுத்திருந்தது.
இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு:அமித் ஷா சிக்குகிறார்!புதிய ஆதாரங்களுடன் சி.பி.ஐ!
புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் உள்ளிட நான்கு அப்பாவிகள் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியின் நம்பிக்கைக்குரியவருமான அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை சி.பி.ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
புதன், ஜூலை 17, 2013
பாப்புலர் பிரண்ட் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கு! - ஐ.பி, என். ஐ.ஏவுக்கு ப்ரஸ் கவுன்சில் நோட்டீஸ்!
புதுடெல்லி: நற்பெயரை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து 10 நாளிதழ்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் ஐ.பி மற்றும் என்.ஐ.ஏவுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நேற்று டெல்லியில் நடந்த அமர்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் வாதம் கேட்டபிறகு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய கருத்து நரேந்திரமோடி மீது அவதூறு மற்றும் தேச துரோக வழக்கு பதிவு!
குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி, ஒரு பேட்டியில் கோத்ரா கலவர சம்பவம் குறித்து வருத்தம் உண்டா? என்ற கேள்விக்கு வளர்ப்பு நாயை ஒப்பிட்டு பதில் அளித்தார். இதனை சுட்டிக்காட்டி நரேந்திரமோடி மீது பாட்னா பல்கலைக்கழக புள்ளியியல் துறை ஆசிரியர் பினெய் குமார்சிங் என்பவர் பாட்னா தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு மற்றும் தேச துரோக வழக்கு தொடர்ந்தார்.
பிகார்: அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 16 குழந்தைகள் பலி!
பிகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தரமற்ற மதிய உணவைச் சாப்பிட்ட சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பிகாரின் சரன் மாவட்டத்தில் உள்ள மஸ்ராஹ் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்தனர். சிலர் மயக்கமடைந்தனர். பள்ளியிலேயே 5 குழந்தைகள் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுவரை 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
கஷ்மீர் இளைஞர் மும்பையில் மர்மமான முறையில் மரணம்!-மக்கள் போராட்டம்!
ஸ்ரீநகர்: கஷ்மீரைச் சார்ந்த இளைஞர் ஒருவர் மும்பையில் மர்மமான முறையில் மரணித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீநகரில் வன்முறை ஏற்பட்டது. இளைஞரின் மரணம் கொலை என்று கூறி ஊர்மக்களும், போலீசும் மோதலில் ஈடுபட்டனர். மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குலாம்தன்போராவைச் சார்ந்த பர்வேஸ் அஹ்மது டெலியின் உடல் நேற்று முன் தினம் மாலையில் ஸ்ரீநகருக்கு கொண்டுவரப்பட்டது.
SDPI கட்சியின் தன்னலமற்ற சேவையின் எதிரொலி! ஒரே நாளில் 170 துப்புறவு பணியாளர்களை களமிறக்கிய மாநகராட்சி!
நெல்லை: கடந்த 07.07.2013 அன்று மாநகராட்சியின் 37 வது வார்டுக்கு உட்பட்ட காஜா நாயகம் தெருவின் சுகாதார சீர்கேட்டை சரி செய்யும் நோக்கில் SDPI கட்சியினர் "நமக்கு நாமே" என்ற தன்னலமற்ற சமூக சேவையை கையில் எடுத்து காஜா நாயகம் தெரு மற்றும் மேத்தமார்பாளையம் 4 வது தெருவின் தேங்கி கிடந்த கழிவுநீர் ஓடைகளை சிறிதும் தயக்கமின்றி தாங்களின் கைகளாலே சுத்தம் செய்து பல மாதங்களாக தேங்கிக் கிடந்த மலக் கழிவுகளை அப்புறப்படுத்தின் கழிவு நீர் ஓடைகளை சரிசெய்து கழிவுநீரை (சாக்கடை) ஓடச்செய்தனர்.
செவ்வாய், ஜூலை 16, 2013
ஹரியானா: போதை விருந்தில் மாணவர்கள்! - 100-க்கும் மேற்பட்டோர் கைது!
ஹரியானா மாநிலத்தில் உள்ள மது குடி மையத்தில் போதை விருந்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மில்லினியம் சிட்டி என்று பெருமையுடன் அழைக்கப்படும் குர்கான் நகரில்தான் இந்த கலாச்சார சீரழிவு சம்பவம் அரங்கேறி உள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவ மாணவிகளை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
பிரிவினை ஏற்படுத்த முயற்சி செய்யும் பாஜகவுக்கு மம்தா எச்சரிக்கை!
இந்து தேசியவாதி என்று அறிவித்துள்ள நரேந்திர மோடி ராமகிருஷ்ண பரமஹம்சரை விட பெரியவரா என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். ஹவுரா மாவட்டதில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரு கிளையில் பூத்த மலர்களை போன்றவர்கள் என்றும், தங்களுக்கு இரு பிரிவினர் மீதும் அக்கறை உண்டு என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















