செவ்வாய், பிப்ரவரி 25, 2014

ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர் ஸைனுல் ஆபிதீன் ஹஸன்!

இதுவரை எல்லோரும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற துடிப்பான முழக்கத்திற்கு சொந்தக்காரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் என நம்பியிருந்தார்கள்.ஆனால், நரேந்திர லூதர் எழுதிய ‘LEGENDOTES OF HYDERABAD’ என்ற நூலில் இன்னொரு வரலாறு கூறப்பட்டுள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி : அம்மா வைத்த ஆப்பு

லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற இலக்குடன், தே.மு.தி.க.,வில் இருந்து, அ.தி.மு.க., பக்கம் தாவிய, அக்கட்சியின் அதிருப்தி, எம்.எல்.ஏ., பாண்டியராஜனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதேபோல், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்ற ஆறு பேரும், அதிருப்தி அடைந்துள்ளனர்.

நிராகரித்து விட்டார்:
விருதுநகர் தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பாண்டிய ராஜன். இவர், தே.மு.தி.க., சார்பில், விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, விஜயகாந்தி டம், 'சீட்' கேட்டார். ஆனால், கட்சியில் ஒருவருக்கு, ஒரு பதவிதான் வழங்கப்படும் எனக் கூறி, அவரின் கோரிக்கையை, விஜய காந்த் நிராகரித்து விட்டார். இதையடுத்து, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், ஏழாவது ஆளாக முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க., ஆதரவாளராக மாறினார், பாண்டியராஜன். அதுமட்டுமின்றி, தன் காரிலும், அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தினார். அ.தி.மு.க., கரைவேட்டி அணிந்து, பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட, தனக்கு நிச்சயம், அ.தி.மு.க.,வில், சீட் கிடைக்கும் என, எதிர்பார்த்தார். சீட் கொடுக்கப்பட்டால், தற்போதைய, எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்யவும், தயாராக இருந்தார். அதனால், விருதுநகர் தொகுதியில், மகளிர் குழுக்களை உருவாக்கி, நிதி உதவி அளித்து வந்தார். தன், திருமண நாளை ஒட்டி, சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, தன் மனைவியுடன் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். அப்போது, அ.தி.மு.க., உறுப்பினராக்கும்படி கேட்டு, கடிதம் ஒன்றையும், முதல்வரிடம், பாண்டியராஜன் வழங்கினார்.

தவறாக பிரசாரம் செய்யும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் ஷிண்டே ஆவேசம்


புனே:காங்கிரசுக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்யும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என பேசி மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அச்சுறுத்தியுள்ளார்.இது குறித்து தனது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் நடந்த ஒரு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிண்டே பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:சமீபத்தில் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் காங்கிரசுக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை பரப்பிவரும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என்றார்
. எனது துறை கட்டுப்பாட்டின் கீழ் புலனாய்துறை உள்ளது. இது போன்ற விஷயங்களை யார் செய்கிறார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் என்றார்.லோக்சபா தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள், தனியார் ஏஜென்சிகள் மூலம் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. இது பா.ஜ.,வுக்கு சாதகமான கணக்குகளை சொல்லிவருகின்றன.

உலக டென்னிஸ் தர வரிசை: 78-வது இடத்தில் சோம்தேவ்

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முதலிடத்திலும், செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 3-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 4-வது இடத்திலும், அர்ஜென்டினா வீரர் டெல்போர்டோ 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர். 

டெல்லி ஓபன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் 18 இடங்கள் முன்னேறி 78-வது இடம் பிடித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சோம்தேவ் 62-வது இடத்தை பிடித்ததே அவரது சிறந்த தர வரிசையாகும். டெல்லி ஓபன் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 3 இடங்கள் பின்தங்கி 146-வது இடம் பெற்றுள்ளார். 

மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் மன்னன் கைது

 
மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜோவாக்கின் எல் சாப்போ கஸ்மேன் லோயெரா.  இவனுக்கு வயது 56.  அமெரிக்காவுக்கு போதை பொருள் விநியோகம் செய்வதில் இவன் பெரும் பங்கு வகித்து வந்தான்.  கஸ்மேன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.30 கோடி பரிசு தொகை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்து இருந்தது.

சுரங்க பாதை வீடுகள் 

அவனை கடந்த 13 ஆண்டுகளாக சர்வதேச போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் அவன் மெக்சிகோவில் பசிபிக் கடற்கரை நகரமான மஷட்லானில் கைது செய்யப்பட்டான். அங்குள்ள ஓர் ஓட்டலில் பதுங்கியிருந்த அவனை போலீசார் கைது செய்தனர்.  அதன் பின்பு போலீசார் நடத்திய சோதனையில், கஸ்மேனுக்கு 46 சொகுசு கார்கள், 16 வீடுகள் மற்றும் 4 பண்ணை வீடுகள் இருந்துள்ளன.
அவனுக்கு சொந்தமான வீடுகளில் 7 வீடுகள் சுரங்க பாதை கொண்டதாக அமைந்துள்ளது.  இதனால், போலீசார் அவனை கைது செய்ய முற்படும்போது தப்பித்து செல்வதற்கு வசதியாக இந்த சுரங்க பாதை இருந்துள்ளது.  இந்த சொத்துக்களை தவிர்த்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
அமெரிக்கா கோரிக்கை
அவற்றில் பெரிய வகை ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவையும் அடங்கும்.  அமெரிக்காவிற்கு 25 சதவீத போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் கஸ்மேனுக்கு தொடர்பு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தற்போது, இவனை நாடு கடத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

திங்கள், பிப்ரவரி 24, 2014

ஸ்ரீலங்கா பள்ளிவாசல்களுக்கு காத்திருக்கும் ஆபத்து........


மார்­கழி மாதக் குளிரில் எம் மத்­தியில் மீண்டும் சூடு பிடித்­துள்ள செய்தி பள்­ளி­வா­சல்கள் உடைக்­கப்­ப­டு­கின்­றன, முஸ்­லிம்­களின் இருப்­புக்கு அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றது என்பதாகும். தம்­புள்­ளையில் ஆரம்­பித்து தற்­போது வரை சுமார் 30 பள்­ளி­வா­சல்கள் சிங்­க­ள-­ பௌத்த இன­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு இரை­யா­கி­யுள்­ளன.

ஆப்கானிஸ்தானில் இந்திய மருத்துவர்... !


தாலிபான்களின் செல்வாக்கு மிகுந்த காந்தஹார் பகுதியில்
பணியாற்றுவது மகிழ்ச்சியே என்று இந்திய டாக்டர் ஷா நவாஸ்
தெரிவித்துள்ளார்.45 வயதான ஷா நவாஸ் இங்குள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் சேவை புரிந்து வருகிறார்.

ஒரு ரூபாய்க்கு காசோலை! இந்தியாவின் நிலை?...

ஹரியானாவின் மேவாத்தில் சூறாவளியின் காரணமாக விவசாய பயிர்கள் அழிந்ததால் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடாக வழங்கிய காசோலையின் மதிப்பை கேட்டால் அனைவரும் ஆச்சரியம் அடைவார்கள்.பலருக்கும் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய்க்கான காசோலைகள்வழங்கப்பட்டுள்ளன.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதல்லாம்.....? பயம்!...அரபு எழுத்து ஏற்படுத்திய அச்சம்


க பயணி ஒருவர் அரபு மொழியில் எழுதியதைக் கண்ட அருகில் அமர்ந்திருந்த மாணவர்கள் அச்சமடைந்து புகார் அளித்ததை தொடர்ந்து பிரிட்டீஷ் விமானம் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதப்படுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்! கிடுக்குபிடியில் சி.ஐ.ஏ!

:

யெமனில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ நடத்தி வரும் ஆளில்லா விமானத்தாக்குதல்களின்(ட்ரோன்) சட்ட அந்தஸ்து குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கேள்வி எழுப்பியுள்ளது. 

கடந்த டிசம்பரில் மத்திய யெமனில் ரதாஃ மாகாணத்தில் சி.ஐ.ஏ நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் திருமணக் குழுவைச் சார்ந்தவர்கள் என்றும் போராளிகள் அல்லர் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குஜராத் இனக்கலவரத்துக்கு காரணமானவர் நரேந்திர மோடி: சரத்பவார் கடும் தாக்கு!


குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் ஏராளமான முஸ்லிம்கள் இறந்தனர். இதில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், நரேந்திர மோடியை கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.

மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் – கேபர் ஓனா!


துருக்கி நாட்டில் பிரயாணம் செய்த ஹங்கேரியிலுள்ள ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதி கேபர் வோனா, “மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் மட்டுமே” என இஸ்லாத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சனி, பிப்ரவரி 22, 2014

பாரதீய ஜனதா ( டீக்கடை) காங்கிரஸ்( பால்பூத்) கம்யூனிஸ்ட் ....?


                                         

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆரம்ப காலத்தில் டீக்கடை நடத்தியவர் என்பதால் அவரை காங்கிரசார் டீக் கடைக்காரர் என்று ஏளனம் செய்தனர். அதையே பாரதீய ஜனதா கையில் எடுத்துக்கொண்டு நரேந்திரமோடி பெயரில் டீக்கடைகள் திறந்தது.

தமிழ்நாட்டில் தொடரும் வெடிகுண்டு கலாச்சாரம் ... இதன் பின்னணி என்ன ?


செஞ்சியை அடுத்த நரசிங்கராயன்பேட்டை அருகே விழுப்புரம் மாவட்ட ‘கியூ’ பிரிவு போலீசார் இன்று வாகன சோதனை நடத்தினர். செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு மினிவேனை போலீசார் வழிமறித்து நிறுத்து சோதனையிட்டனர்.

வியாழன், பிப்ரவரி 20, 2014

இராமநாதபுரம் PFI ஊர்வலத்தில் தடியடி- உண்மை அறியும் குழு அறிக்கை:-


“பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’ (யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்ததிவருகின்றனர். சீருடை அணிந்த அவ்வமைப்பின் இளைஞர்களும், அமைப்பின் பிற ஆதரவாளர்களும் தேச ஒற்றுமை சார்ந்த முழக்கங்களை இட்டுக்கொண்டு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துவது வழக்கம். 

புதன், பிப்ரவரி 19, 2014

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு: தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது மத்திய அரசு...


இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க கோரி மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த இட ஒதுக்கீடானது 4.5 சதவீதமாகும்.

 அதாவது, கல்வி, வேலைவாய்ப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து இந்த ஒதுக்கீடு திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. 

நாடாளமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 42 இடங்களில் போட்டி!


நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ  கட்சி, ஒன்பது மாநிலங்களில் மொத்தம் 42 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஃப்ஸர் பாஷா கூறும் போது, "கேரளாவில் 20, தமிழகம் மற்றும் மேற்கு வங்களாத்தில் 5, கர்நாடகாவில் 4,  ஆந்திர பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் 2,  மத்தியபிரதேசத்தில்  மற்றும் டெல்லியில் 1 என 42 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்" என்று தெரிவித்தார்.

காவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சென்னையில் PFI மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் 17/2/2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் பொதுமக்கள் மீது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று 18/2/2014 மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

டெல்லி: முதல்வருக்கும் கவர்னருக்கும் மோதல்..


டெல்லியில் கவர்னர் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அரசு அமைத்தது. சட்டசபையில் கடந்த 14–ந் தேதி, முதல்–மந்திரி முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து மட்டத்திலும் ஊழல் புரிவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் ஜனலோக்பால் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சித்தார். இது தோல்வியில் முடிந்தது.

ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

இத்தாலி கொலையாளிகளுக்கு கருணை காட்டும் மத்திய (சோனியா) அரசு...

கொச்சியில் மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான இத்தாலிய கப்பல் பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டாம் என்ற மத்திய அரசின் முடிவு கேரளா மீனவ சமுதாயத்தில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் கேரளா கடற்பரப்பில் 2 இந்திய மீனவர்களை சுட்டுகொன்ற வழக்கில் கைதான இத்தாலி கப்பல் பாதுகாப்பு வீரர்கள் இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையில் ஜாமீனில் உள்ளனர்.