திங்கள், ஆகஸ்ட் 06, 2012

அஸ்ஸாம் அகதிகள் முகாமில் மலேரியா காய்ச்சல்: 13 பேர் மரணம்

குவஹாத்தி:அஸ்ஸாமில் போடோ பிரிவினைவாத பயங்கரவாதிகளால் கலவரம் நிகழ்த்தப்பட்ட கொக்ராஜர், சிராங்க், துப்ரி மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாமில் மலேரியா காய்ச்சல் பாதித்து 13 பேர் மரணமடைந்துள்ளனர். நான்கு மாவட்டங்களில் உள்ள 303 துயர்துடைப்பு முகாம்களில் சுகாதாரத்துறை நடத்திய இரத்தப் பரிசோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மலேசியா காய்ச்சல் பாதித்துள்ளது

உத்தரகாண்டில் வெள்ளப்பெருக்கு:10 பேர் மரணம், 38 பேரை காணவில்லை !

டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில் பத்துபேர் மரணித்துள்ளனர். 38 பேரை காணவில்லை. ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் வழியில் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள கர்ணபிரயாக் பகுதியில் சனிக்கிழமை கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இதே மாவட்டத்தில் உள்ள போக்ரி பகுதியில் ஒரு குழந்தை

சனி, ஆகஸ்ட் 04, 2012

வெறி கொண்ட புத்த பயங்கரவாதிகளும் வலி கண்ட முஸ்லிம்களும் ! (கலவரத்திற்கு பின் மியன்மாரில் நடக்கும் அட்டுழியம்)

ஒரு மனிதன் வெட்டி வீழ்த்தப்படுகிறான். இப்போது அவனது நிலை தன் உயிரின் இருப்பிற்கான போராட்டம். வீழ்ந்தவனின் கால்கள் தறிக்கப்படுகின்றன. பின்னர் அவன் சிறுவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறான். அவர்கள் அவனது தலையை குறிவைத்து கூரான கற்களால் எறிகின்றனர். துடித்து போய் சுருண்டு கிடக்கிறான் அந்த மனிதன். எப்படியிருக்கும்?. அந்த மனிதன் நானாகவோ
அல்லது நீங்ளாகவோ இருந்தால் எவ்வாறிருக்கும்?என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். நிலைமைகள் நிச்சயமாக புரியும்.
இன்றைய மியன்மார் களம் இது. ரோஹிங்யா முஸ்லிம்கள் இப்படிபட்ட

இளம்பெண்ணுடண் நடனம் ஆடிய பாகிஸ்தான் நீதிபதி ராஜினாமா (வீடியோ இணைப்பு)

 Pakistani judge boogying with 'dancing girl' quitsபார்ட்டியில் இளம்பெண்ணுடன் நீதிபதி நடனமாடிய காட்சிகள் யூ டியூபில் வெளியானதால் பாகிஸ்தானில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கனேவல் மாவட்டத்தில் வசிப்பவர் நீதிபதி முகமது மசூத் பிலால். இவருடைய சகோதரரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில்

சிரியா அதிபர் பதவி விலக 133 நாடுகள் ஐ.நா.சபையில் ஓட்டளித்து தீர்மானம் !

சிரியா அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என ஐ.நா.பொதுச்‌சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த 19 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளன. சிரியாவுடன் பேச்சுவார்த்தை

சவுதி அரேபிய நிறுவனத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமானங்களை குத்தகைக்கு விட்ட கலாநிதி மாறன் !

சன் டிவி குழுமத்துக்கு சொந்தமான ஸ்பைஸ் ஜெட் தனது 2 போயிங் விமானங்களை செளதி அரேபியாவைச் சேர்ந்த நாஸ் ஏர் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
வழக்கமாக மழைக்காலத்தில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும். இந்த ஆண்டும் இதே நிலை நிச்சயம் என்பதால் பல சேவைகளை விமான

சீனாவின் அடாவடித்தனம் அரசு அதிகாரிகள், மாணவர்கள் நோன்பு நோற்கத் தடை !

முஸ்லிம்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் வழிபாடுகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பு நோற்பதை அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கடைப்பிடிக்கக் கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் முஸ்லிம்களின் மத நடவடிக்கைகளான நோன்பு நோற்றல், மசூதிகளுக்குச் செல்லுதல் போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு சீன அரசு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களைக் கேட்டுக் கொள்ளும் வாசகங்கள் சீன

அன்னா ஹசாரே குழுவின் தப்புத் தாளங்கள் !

 Anna Seeks Political Asylum From The People டெல்லி: மக்கள் ஆதரவை கிட்டத்தட்ட முழுமையாகவே இழந்து விட்டார் அன்னா ஹசாரே. அடுத்தடுத்து அவரது குழுவினர் செய்த தவறுகள், குழப்பங்கள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இக்குழு இழந்து விட்டது. இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆழ்ந்து யோசிக்காமல் அரசியல் பிரவேசம் என்ற மிகப் பெரிய தவறான முடிவை எடுத்து விட்டார்கள். இது மக்களிடையே மட்டுமல்லாமல்,

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

முஸ்லிம் என்ற காரணத்தால் நாங்கள் இந்நாட்டில் வாழக்கூடாது என்றா கூறுகின்றீர்கள் சார்?” -சிதம்பரத்தை திணறடித்த உமியா காத்தூன், தில்ரூபா ஹுஸைனின் கேள்விகள் !

chidambaram visit assam kokrajarகொக்ராஜர்:பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கேள்விக் கணைகளால் துளைத்த போதும் தடுமாறாத மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.எதிர் தரப்பினரின் எந்த கேள்விகளுக்கும், புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் சிதம்பரத்தை பதினொன்றாவது வகுப்பு பயிலும் உமியா காத்தூனும், இல்லத்தரசியான தில்ரூபா ஹுஸைனும்

ரோஹிங்கியா முஸ்லிம் இனப்படுகொலை: அரசின் முழு ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்டது – ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் நேரடி ரிப்போர்ட் !

human rights group said Myanmar government forces opened fire on crowds of ethnic Rohingyaயங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை தடுக்க மியான்மர் அரசு எதுவும் செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக வன்முறையாளர்களுடன் இணைந்து ராணுவம் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் நேரடி ரிப்போர்ட் கூறுகிறது

வெளிநாட்டுக்கு தப்பத் திட்டமா?..நித்தியானந்தா, ரஞ்சிதா பாஸ்போர்ட்களுடன் டெல்லியில் ஒருவர் சிக்கினார் !

 Nithyanantha Ranjitha S Passports Freezed By Delhi டெல்லி: நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்த 30 பேரின் பாஸ்போர்ட்களுடன் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ஒரு நபரை போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனால் நேபாளத்திலிருந்து வெளிநாடுக்கு தப்பியோட நித்தியானந்தாவும், அவரது கோஷ்டியினரும் திட்டமிட்டிருந்தனரா எனற பெரும் கேள்வி எழுந்துள்ளது. நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள் ஏராளமாக உள்ளன. அதேபோல ரஞ்சிதா மீதும் வழக்குகள்

பரிசுப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு போன பிரதீபா பட்டீல்!: மீண்டும் சர்ச்சையில் . . .

 Patil Takes Away Gifts She Received டெல்லி: நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் தமது சொந்த கிராமமான அம்ராவதிக்கு எடுத்துச் சென்றதுதான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.அவர் தமது பதவிக்காலத்தில் இருந்த போது 150 பரிசுப் பொருட்களை பெற்றிருக்கிறார். அதில் அமிர்தசரஸ் தங்கக் கோயில் பொறிக்கப்பட்ட தங்கத் தட்டு ஒன்றும்

இஸ்ரேலுக்கு கடிதம்:முர்ஸி அலுவலகம் மறுப்பு . . .

Egypt denies Mursi letter sent to Israelகெய்ரோ:மேற்காசியாவில் சமாதானத்திற்காக பாடுபடக் கோரி எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி, இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸிற்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியான செய்தியை முர்ஸியில் அலுவலகம் மறுத்துள்ளது. மேற்காசியாவில் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்க கோரி முர்ஸி, பெரஸிற்கு கடிதம் எழுதியதாக

யெமன் உள்துறை அமைச்சகத்தில் மோதல்: 17 பேர் மரணம் !

17 killed in clashes at Yemen's interior ministryஸன்ஆ:யெமன் உள்துறை அமைச்சக கட்டிடத்தில் ராணுவத்தினருக்கும், ராணுவத்தில் இருந்து மாறிய புரட்சி  ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.28 புரட்சி ராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ராணுவ உடையில் வந்தவர்கள் உள்துறை அமைச்சக கட்டிடத்தில் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக

அஸ்ஸாம்:புலன்பெயர்ந்தவர்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர் !

Riot victims returning to their homesகுவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஒருவார காலமாக நிகழ்ந்துவந்த போடோ பிரிவினைவாத பயங்கரவாதிகள் நடத்திய கலவரம் ஓய்ந்துள்ளது. இம்மாதம் 15-ஆம் தேதிக்குள் வீடுகளை விட்டு வெளியேறி அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரும் வீடு திரும்புவார்கள் என முதல்வர் தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.கலவரம்

கிராம மக்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோரின் அன்றாட செலவு ரூ.17க்கு கீழ் !

ten of rural India lives on less than Rs 17 a dayபுதுடெல்லி:கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த போதிலும் கிராமிய பகுதிகளில் மக்கள் வாழ்க்கை மாற்றமில்லாமல் தொடர்வதாக அறிக்கை கூறுகிறது. 10 சதவீதத்திற்கும் அதிகமான கிராம மக்களின் அன்றாட செலவு ரூ.17 க்கும் கீழ் இருப்பதாக அரசு நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.2011-12 சர்வே முடிவுகளின் படி கிராமீய பகுதிகளில் சராசரி மாத தனிநபர் செலவு 503.49 ரூபாய் ஆகும்.

புனே குண்டுவெடிப்பு:டிஃபன் பாக்ஸை எடுத்துச் சென்ற தயானந்த் பாட்டீல் கைது !

Dayanand Patil being taken to Kamala Nehru Hospital for full body scanபுனே:மஹராஷ்ட்ரா மாநிலம் புனே நகரத்தை நேற்று பீதியில்ஆழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் டிஃபன்ஸ் பாக்ஸில் வெடிக்குண்டை எடுத்துச் சென்றபொழுது வெடித்ததால் காயமுற்று சிகிட்சை பெற்றுவரும் உள்ளூர் டெய்லரான தயானந்த் பாட்டீல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.புனேயில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜங்லி மகராஜ் சாலையையொட்டிய

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

புனேயில் மலேகான் மாதிரி தொடர் குண்டுவெடிப்பு ஹிந்துதுவாதிகளின் சதியா ?

Four explosions rock Puneபுனே:மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற சுசீல்குமார் ஷிண்டேயின் வருகைக்கு சற்று முன்பு புனேயில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஏழு நிமிடங்களுக்கு இடையே நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதர 3 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கப்பட்டன. பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண

ஸுஜூது செய்து வெற்றியை கொண்டாடியா அஃலா அப்துல் காஸிம் !

Egypt's Alaaeldin Abouelkassem celebrates defeating Italy's Andreaஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான வாள் வீச்சில்(பென்சிங்) வெள்ளிப் பதக்கம் வென்ற அஃலா அப்துல் காஸிம் நிலத்தில் தலையை வைத்து இறைவனுக்கு சாஷ்டாங்கம்(ஸுஜூது) செய்து நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது வெற்றியைக் குறித்து அஃலா அப்துல் காஸிம் கூறியது: ‘காயம் மூலம் சிரமத்துடனேயே போட்டியில்

புத்தமத வெறியர்களால் இலங்கையில் மதச்சுதந்திரம் பாதிப்பு – அமெரிக்கா அறிக்கை !

Abuses of religious freedom in Sri Lanka last year - USகொழும்பு:இலங்கையில் கடந்த ஆண்டு பல மத வழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் கிறித்துவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதே போல பள்ளிவாசல்களும்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஜெர்மனில் போராட்டம் !

Muslims in Berlin rally against violence toward Rohingyas in Burmaபெர்லின்:மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழித்தொழிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இரண்டு மணிநேரம் நீண்ட போராட்டம் நடைபெற்றது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொலை, கொள்ளை ஆகியவற்றைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை தடுக்க ஜெர்மன் அரசு தனது செல்வாக்கை உபயோகிக்க

போடோ பயங்கரவாதிகளுக்கு அத்வானி பகிரங்க ஆதரவு . . .

கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பிரிவினைவாதிகளின் குண்டுவெடிப்பும், பாதிக்கப்பட்ட மக்களின் கொந்தளிப்பும் வரவேற்றன.துப்ரி மாவட்டத்தில் மக்கள் கடும் கோபத்துடன் சிதம்பரத்தை சந்தித்தனர். கோர்பாரா மாவட்டத்தில் உள்ள ஜுகிபாராவில் ராணுவ வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். ஆறு பேருக்கு கடுமையாக காயம் ஏற்பட்டது.அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகள் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி வன்முறையில் பலர்

குஜராத் முஸ்லிம்கள் இப்பொழுதும் பீதியில் வாழ்கின்றார்கள்! – அமெரிக்காவின் அறிக்கை !

வாஷிங்டன்:குஜராத்தில் முஸ்லிம் சமூகம் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் தற்பொழுதும் வேட்டையாடப்படுவோம் என்ற பீதியில் வாழ்வதாக அமெரிக்காவின் மத சுதந்திரம் குறித்த அறிக்கை கூறுகிறது.2002 குஜராத் இனப் படுகொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன்ன்னால் கொண்டு வருவதிலும் தாமதம் ஏற்படுவது குறித்து அவ்வறிக்கை கவலை தெரிவிக்கிறது. மத்தியில் ஹிந்துத்துவா தேசியவாதத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி

ஜே டே கொலை:போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பு குறித்து சந்தேகம் வலுக்கிறது !

J Dey  - Jigna Voraமும்பை:பிரபல க்ரைம் ரிப்போர்டர் ஜே டேயின் கொலையின் பின்னணியில் போலீஸ் முக்கிய புள்ளிகளின் பங்கு குறித்து சந்தேகம் மீண்டும் வலுத்து வருகிறது.ஜே டே கொலை வழக்கில் கைதான பத்திரிகையாளர் ஜிக்னா வோராவுக்கு மஹராஷ்ட்ரா அமைப்பு ரீதியான குற்ற தடுப்புச்சட்ட(மோக்கா) நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதன் மூலம் ஜே டே கொலை வழக்கில் மீண்டும் போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தேகப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.ஜிக்னா மீது போலீஸ் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு போதிய

கேரளா:முஸ்லிம் லீக் தொண்டர் கொலை வழக்கில் சி.பி.எம் தலைவர் கைதை கண்டித்து நாளைமுழு அடைப்பு

Kerala - P.Jayarajan arrested today in Shukkoor murder caseகண்ணூர்:முஸ்லிம் லீக் தொண்டர் ஷுக்கூர் கொலை வழக்கில் கேரள மாநில முக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பி.ஜெயராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றம் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.ஷுக்கூர் கொலை வழக்கில் விசாரணை நடத்த பி.ஜெயராஜனிடம் இன்று ஆஜராகுமாறு புலனாய்வு குழு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று விசாரணைக்கு ஆஜரான ஜெயராஜனை போலீசார்

புதன், ஆகஸ்ட் 01, 2012

என்று தணியும் இந்த ரத்த தாகம்?

குவஹாத்தி.july29: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின்

பயணிகள் ரயிலில் பாதுகாப்பில்லை. அமைச்சர்களின் ஆடம்பர ரயில் பெட்டிக்கு ரூ.1.50 கோடியா? பொதுமக்கள் கொந்தளிப்பு !

தில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 32 மனித உயிர்களை பலி கொண்டதற்கு ரயில்களின் மோசமான பராமரிப்பே காரணம் என குற்றச்சாட்டு வலுத்து வரும் வேளையில், அமைச்சர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் சொகுசு சிறப்பு ரயில் ஆடம்பரத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது ரயில் பயணிகளிடையே பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தி

நமீபியாவில் 400 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீர் உள்ள ஏரி பூமிக்கு அடியில் கண்டுபிடிப்பு !

he new aquifer found in Namibia could serve the northern part of the country for up to 400 years ஆப்ரிக்க நாடான நமீபியாவில் 10 ஆயிரம் ஆண்டு பழமையான பிரமாண்ட நிலத்தடி நீர்நிலை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் 400 ஆண்டுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்கின்றனர். தென்மேற்கு ஆப்ரிக்க நாடு நமீபியா. அட்லான்டிக் பெருங்கடல் ஓரமாக தென்ஆப்ரிக்காவை ஒட்டியுள்ளது. இங்கு குடிநீர்

சவுதி அரேபியாவில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை !

பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதன் மூலம் அந்த புகையை சுவாசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொது இடங்களில் சிகரெட் பிடிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், தற்போது சவுதி அரேபியாவும் இதற்கு தடை விதித்துள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூடாது. மேலும், ஓட்டல்கள், காபி ஷாப்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெரு வணிக

சூரிய சக்தி மூலம் 22 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து ஜெர்மனி உலக சாதனை !

Germany having world record to produce electricity from Solar.சூரிய சக்தி மூலம் 22 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து ஜெர்மனி உலக சாதனை படைத்துள்ளது. ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஜெர்மனி, எட்டு அணு மின் நிலையங்களை மூடி விட்டது. மீதமுள்ள ஒன்பது அணுசக்தி நிலையங்களை வரும் 2022ம் ஆண்டுக்குள் மூடி விட திட்டமிட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக காற்றாலை, சூரிய சக்தி மூலம்

உடல் நலம் பாதிகப்பட்ட இளைஞரை கொடூரமாக தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை !

அல் ஹலீல்: கடந்த திங்கட்கிழமை (30/07/2012) பெய்ட் உம்மார் கிராமத்தைச் சேர்ந்த உளநலம் பாதிக்கப் பட்ட பலஸ்தீன் இளைஞனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்புப் படை அவனை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளது.
முஹம்மத் அபூ தியா (வயது 23) உளநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. உளநலம் பாதிக்கப்பட்ட தமது மகன் கொடூரமாக அடித்து இம்சிக்கப்படுவது

20 மாநிலங்களில் கரண்ட் இல்லை.. வட மாநிலங்கள் முழுவதும் ரயில் சேவைகள் கடும் பாதிப்பு !

டெல்லி: தலைநகர் டெல்லி உள்பட 20 வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மின் வினியோகம் இன்றும் பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.நேற்று வடக்கு மின் தொகுப்பில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது நடந்து 48

இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர் !

 Minister Absentia As Railways Runs Amok கொல்கத்தா: அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள், சற்றும் அலட்டிக் கொள்ளாத ஒரு ரயில்வே அமைச்சர். மிக்க கொடுமையான ஒரு அமைச்சரை நமது நாட்டு மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மக்களைப் பார்த்து பரிதாபம்தான் வருகிறது.இந்திய ரயில்வேயின் அமைச்சராக எத்தனையோ பெரிய மனிதர்கள் இருந்துள்ளனர். ஒரே ஒரு விபத்து நடந்தது என்பதற்காக தனது அமைச்சர் பதவியை தார்மீகப் பொறுப்பேற்று உதறியவர் நிதீஷ் குமார். இன்றளவும்

மீண்டும் நிதியமைச்சரானார் ப.சிதம்பரம்- உள்துறைக்கு ஷிண்டே, மொய்லிக்கு மின்சாரம் . . .

 Fm Chidu Is Fine But Shinde Home டெல்லி: நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்து அவர் குடியரசுத் தலைவராகிவிட்ட நிலையில் இன்று சிறிய அளவிலான மாற்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் செய்தார்.இதுவரை உள்துறை அமைச்சராக இருந்து வந்த ப.சிதம்பரத்திடம் மீண்டும் நிதித்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ப.சிதம்பரம்தான் அதைக்

அமெரிக்காவின் தடைக்கு எதிராக ஈரான் புகார் அளிக்கும் !

CA8TI0NAடெஹ்ரான்:அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ஏற்படுத்தியிருக்கும் தடைகளுக்கு எதிராக ஈரான் புகார் அளிக்க உள்ளது.ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி இல்லாமல் இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி ஈரான் புகாரை அளிக்கும். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில்தான் இந்த புகார் அளிக்கப்படும் என ஈரானின் சர்வதேச சட்ட விவகாரங்களுக்கான

குஜராத்:இனப்படுகொலையின் போது சேதமடைந்த வழிப்பாட்டுத் தலங்களை சீரமைக்க உத்தரவிடும் தீர்ப்புக்கு தடை இல்லை !

SC refuses to stay HC order on shrinesபுதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட வழிப்பாட்டுத் தலங்களை சீரமைக்க இழப்பீடு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. குஜராத் மோடி அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தை அணுகியது. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது

நீதிபதிக்கு லஞ்சம்:கர்நாடகா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ கைது !

Karnataka BJP MLA Suresh Babuஹைதராபாத்:ஒபுலாபுரம் சுரங்க ஊழலில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய கர்நாடகா மாநில எம்.எல்.ஏ சுரேஷ்பாபு கைது செய்யபட்டுள்ளார். ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெறுவதற்காக நீதிபதி பட்டாபிராம

நாகர்கோவில்:வீடுகள் மீது கல்வீச்சு! – நள்ளிரவில் முஸ்லிம்கள் சாலை மறியல் !

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டம்2நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும். இடலாக்குடியில் ஆஸாத் கார்டன் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நேற்று சில மர்ம நபர்கள் முஸ்லிம் ஆண்கள் ரமலான் இரவு சிறப்புத் தொழுகைக்கு(தராவீஹ்) சென்ற வேளையில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஷேக் மன்சூர், அஹ்மத் கான், நூர்ஜஹான்