குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து விட்டது என்று கூறி வரும் அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடியின் கூற்றை ஆய்வு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் குஜராத் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மோடி கூறுவது போல் குஜராத் அணு அளவு கூட முன்னேறவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில்,குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து அங்கு நடைபெறுள்ள வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை அகமதாபாத் நகரத்தை வந்தடைந்தார்.
இன்னும் சிறிது நேரத்தில் குஜராத் மாநிலத்தின் உப்பு உற்பத்தியில் சிறப்பிடம் வகிக்கும் சுரேந்திராநகர் மாவட்டத்தின் பட்டி மற்றும் கரகோடா கிராமத்தில் வாழும் உப்பள தொழிலாளர்களை சந்திக்கும் ராகுல், அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
இதனைத் தொடர்ந்து, பலசினோரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பகல் 1 மணியளவில் பேசும் அவர் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக