செவ்வாய், மார்ச் 11, 2014

அமெரிக்காவில் 70 இந்திய பாஸ்போர்ட்டுகள் மாயம் அதிர்ச்சி தகவல்




அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பிஎல்எஸ் இன்டர்நேஷனல்ஸ் என்ற தனியார் சேவை நிறுவனம் பாஸ்போர்ட், விசா தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அங்குள்ள இந்தியத் தூதரகம் தங்களின் தேவைகளுக்காக இந்த நிறுவனத்தின் சேவைகளை உபயோகப்படுத்திக்கொள்ளும். அதுபோல் தூதரகத்தால் இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டிருந்த 70 இந்திய பாஸ்போர்ட்டுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ம்தேதி காணாமல்போனது கண்டுபிடிக்கப்பட்டது.



கடுமையான பாதுகாப்பு விதிமீறலான இந்த சம்பவத்தினைக் குறித்து இந்தியத்தூதரகமும், உள்ளூர் காவல்துறையும் சம்பந்தப்பட்ட மத்திய அரசுத்துறையிடம் புகார் செய்தன.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி சான் பிரான்சிஸ்கோ மாநிலக் காவல்துறை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் இந்தப் பாஸ்போர்ட்டுகளுடன், ரொக்கம் மற்றும் காசோலைகளும் பாதகாப்புப் பெட்டகத்திலிருந்து திருட்டு போயுள்ளதாக பிஎல்எஸ் நிறுவன ஊழியர் தெரிவித்துள்ளார்.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் திருடப்பட்ட பாஸ்போர்ட்டுகளை தற்போது ரத்து செய்துள்ளது. இவை பழைய முறைப்படி இல்லாமல் இயந்திரம் மூலம் சரிபார்க்கப்படுவதாலும் உலகம் முழுவதும் ஒரே முறையில் படிக்கப்பட்டு, சரிபார்க்கப்படும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதாலும் ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளை யாரும் தவறான முறையில் உபயோகிக்கமுடியாது என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக