செவ்வாய், மார்ச் 11, 2014

உதடுகள் வறட்சி அடைவது ஏன் என்று தெரியுமா?

உடலிலேயே மிகவும் மென்மையான ஒரு பகுதி தான் உதடுகள். இந்த உதடுகள் தான் ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்தும். ஆம், உதடுகளில் சிறு மாற்றங்கள் இருந்தாலும், அது முகத்தின் அழகையே மாற்றிவிடும். ஆனால் பலர் உதடுகளை சரியாக பராமரிக்காமல் இருக்கின்றனர். உதடுகள் பெண்களுக்கு மட்டும் அழகை கொடுப்பதில்லை, ஆண்களுக்கும் தான். எனவே உதடுகளை பராமரிப்பது என்பது முக்கியமான ஒன்று.
 மேலும் உதடுகளில் எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதனை அப்போதே சரிசெய்ய முயல வேண்டும். அதுமட்டுமல்லாமல், அந்த பிரச்சனை எதற்கு வருகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பலருக்கு உதடுகளில் வறட்சிகள் தான் ஏற்படும். எனவே அத்தகைய வறட்சியானது எதற்கு ஏற்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டால் தான், இனிமேல் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும். சரும வகைகளும்... அதற்கான சிறப்பான ஃபேஸ் பேக்குகளும்... இங்கு உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கான சில காரணங்களையும், அதற்கான நிவாரணிகளையும் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உடலில் அசிட்டிக் அளவுக்கு அதிகமாக இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். அப்போது உதடுகளின் வறட்சியைப் போக்கும் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டு, அசிட்டிக்கின் அளவை குறைக்க வேண்டும். அப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு வந்தால், அசிட்டிக்கின் அளவு குறைந்து அல்கலைன் அளவானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
எப்போதும் உதடுகளில் எச்சல் வைத்துக் கொண்டே இருந்தால், உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெயானது குறைந்து, வறட்சி அடைய ஆரம்பிக்கும். எனவே உதடுகளில் எப்போதும் எச்சில் வைப்பதை நிறுத்துங்கள். உதடுகளில் வறட்சி அடைவது குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக