இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கெவின் பீட்டர்சன் ஆசஷ் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை அணியில் இருந்து கழற்றி விட்டது.
சிறந்த பேட்ஸ்மேனான அவரது நீக்கம் எதிர்பாராத ஒன்றாகும். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பீட்டர்சன் நீக்கப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மீது வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் பாய்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:–
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செயல் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பீட்டர்சனை நீக்கியதன் மூலம் அவரை அவமானப்படுத்தி உள்ளது. ஒரு மிகப்பெரிய வீரரை இப்படி நடத்துவது வேதனை தருவதாகும். அவர் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள்.
இவ்வாறு கெய்ல் கூறியுள்ளார்.
இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் பார்படோசில் இன்று நடக்கிறது. இதில் கெய்ல் விளையாடுகிறார். காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்.
ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக