திருப்பத்தூர் அருகே உள்ள கோவில் இலையாத்தங்குடியைச் சேர்ந்தவர் கலா (வயது 21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு வீடு திரும்பவில்லை. கவலையடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.
இந்த நிலையில் இன்று காலை, தெற்கு இலை யாத்தங்குடி கண்மாய் பகுதியில் நிர்வாண நிலையில் மயங்கி கிடந்தார். உடல் முழுவதும் காயங்களும் காணப்பட்டு இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் அவரை கடத்தி சென்று கற்பழித்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ செவல்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மயங்கி கிடந்த கலாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண்ணை கற்பழித்த ஆசாமிகள் யார்? என்று சப்–இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தி வருகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக